• Oct 07 2024

தெற்கு லெபனானில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவு!

Tamil nila / Oct 6th 2024, 9:37 pm
image

Advertisement

தெற்கு லெபனானில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. 

 லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்றைய தினமும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

 இந்தத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 100 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

 இதனிடையே, லெபனான் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது மேலும் தாமதமடையுமென அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

 லெபனானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

 இதன்படி பாடசாலைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

 எனினும் தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நிலைமைகளை கருத்திற் கொண்டு நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் எனவும் லெபனான் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


தெற்கு லெபனானில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவு தெற்கு லெபனானில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.  லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்றைய தினமும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.  இந்தத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 100 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இதனிடையே, லெபனான் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது மேலும் தாமதமடையுமென அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  லெபனானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.  இதன்படி பாடசாலைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நிலைமைகளை கருத்திற் கொண்டு நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் எனவும் லெபனான் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement