• Sep 21 2024

யானை வேலிகளுக்கு கோடிகளை முதலீடு செய்தாலும் - எந்த பயனும் இல்லை- அமைச்சர் கவலை.! samugammedia

Tamil nila / May 6th 2023, 6:43 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுவதை தடுப்பதற்கு கோடிக்கணக்கில் நிதி செலவழிக்கப்படுகின்ற போதும் அது பயனளிக்கவில்லை என்றும் எனவே இதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள யானை வேலிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் மக்களுக்கு சம்பளம் வழங்க ஆண்டுதோறும் ஐநூறு கோடி ரூபாய் செலவிடப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யானை வேலிகளை பாதுகாப்பதற்காக சுமார் 4500 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மேலும், யானை வேலிகளின் பாதுகாப்பிற்காக பல்நோக்கு சேவைப் படையைச் சேர்ந்த சுமார் 4,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச செலவில் யானை வேலிகள் அமைப்பதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், பாதுகாவலர்களை நிர்வகிப்பதும் பிரச்சினையாக உள்ளதாகத் தெரிவித்த திரு.தென்னகோன், 

யானை வேலிகள் அமைத்த போதிலும், கிராமங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள், யானை-மனிதர்கள் மோதல்களை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக சுமார் 2,500 சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

யானை வேலிகளுக்கு கோடிகளை முதலீடு செய்தாலும் - எந்த பயனும் இல்லை- அமைச்சர் கவலை. samugammedia இலங்கையிலுள்ள கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுவதை தடுப்பதற்கு கோடிக்கணக்கில் நிதி செலவழிக்கப்படுகின்ற போதும் அது பயனளிக்கவில்லை என்றும் எனவே இதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள யானை வேலிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் மக்களுக்கு சம்பளம் வழங்க ஆண்டுதோறும் ஐநூறு கோடி ரூபாய் செலவிடப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.யானை வேலிகளை பாதுகாப்பதற்காக சுமார் 4500 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.மேலும், யானை வேலிகளின் பாதுகாப்பிற்காக பல்நோக்கு சேவைப் படையைச் சேர்ந்த சுமார் 4,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அரச செலவில் யானை வேலிகள் அமைப்பதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், பாதுகாவலர்களை நிர்வகிப்பதும் பிரச்சினையாக உள்ளதாகத் தெரிவித்த திரு.தென்னகோன், யானை வேலிகள் அமைத்த போதிலும், கிராமங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள், யானை-மனிதர்கள் மோதல்களை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக சுமார் 2,500 சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement