அநுர அரசு எங்கள் மீது வன்முறையை பிரயோகித்தாலும் நாங்கள் அச்சப்படாமல் எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக போராடுவோம் என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் இந்தியன் இழுவைப் படகுகளை கட்டாயப்படுத்தி நாங்கள் ஓரளவு தொழில் செய்துகொண்டு இருந்தோம்.
ஆனால் புதிய அரசாங்கம் வந்த பின்னர் நிறைய இழுவைமடி படகுகள் எங்களது வளங்களை அழிக்கின்றது.
ஆகையால் எமது தொழிலாளிகளின் வலைகளும் இல்லாமல் போகின்றன.
புதிதாக பதவியேற்றுள்ள கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கு நாங்கள் இதனை புதிதாக சொல்லவேண்டிய அவசியமில்லை.
கடந்த காலத்தில் நாங்கள் போராட்டத்தை நடாத்தியபோது, இந்திய இழுவைப் படகுகள் குறித்து தமது தலைவருக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம், நடவடிக்கை எடுப்போம் என தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சர் புதிதாக பதவியேற்ற பின்னர் இந்த இழுவை படகுகளை நிறுத்துமாறு எமது சம்மேளனம் சார்பாக நாங்கள் பல கோரிக்கை கடிதங்களை கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளோம். இருப்பினும் நெடுந்தீவு தொடக்கம் சுண்டிகுளம் வரையிலான கடற் பகுதியில் இந்தியன் இழுவை படகுகள் எமது வளங்களை அளிக்கின்றன.
இவற்றினை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவினை எடுக்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்தொழில் செய்யும் மக்களை இணத்து நாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை செய்வோம்.
இப்பொழுது புதிய அரசாங்கம் ஒன்று வந்திருக்கின்றது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றபோது தண்ணியால் அடிப்பார்கள், கட்டையால் அடிப்பார்கள் அவற்றையெல்லாம் பற்றி எங்களுக்கு பயமில்லை.
எங்களது பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாங்கள் போராட்டம் செய்வோம்.
எனவே ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் எம்மீது தாக்குதலை மேற்கொண்டாலும் போராட்டத்தை கைவிடோம்- யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் உறுதி. அநுர அரசு எங்கள் மீது வன்முறையை பிரயோகித்தாலும் நாங்கள் அச்சப்படாமல் எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக போராடுவோம் என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் இந்தியன் இழுவைப் படகுகளை கட்டாயப்படுத்தி நாங்கள் ஓரளவு தொழில் செய்துகொண்டு இருந்தோம். ஆனால் புதிய அரசாங்கம் வந்த பின்னர் நிறைய இழுவைமடி படகுகள் எங்களது வளங்களை அழிக்கின்றது. ஆகையால் எமது தொழிலாளிகளின் வலைகளும் இல்லாமல் போகின்றன.புதிதாக பதவியேற்றுள்ள கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கு நாங்கள் இதனை புதிதாக சொல்லவேண்டிய அவசியமில்லை. கடந்த காலத்தில் நாங்கள் போராட்டத்தை நடாத்தியபோது, இந்திய இழுவைப் படகுகள் குறித்து தமது தலைவருக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம், நடவடிக்கை எடுப்போம் என தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சர் புதிதாக பதவியேற்ற பின்னர் இந்த இழுவை படகுகளை நிறுத்துமாறு எமது சம்மேளனம் சார்பாக நாங்கள் பல கோரிக்கை கடிதங்களை கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளோம். இருப்பினும் நெடுந்தீவு தொடக்கம் சுண்டிகுளம் வரையிலான கடற் பகுதியில் இந்தியன் இழுவை படகுகள் எமது வளங்களை அளிக்கின்றன.இவற்றினை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவினை எடுக்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்தொழில் செய்யும் மக்களை இணத்து நாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை செய்வோம். இப்பொழுது புதிய அரசாங்கம் ஒன்று வந்திருக்கின்றது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றபோது தண்ணியால் அடிப்பார்கள், கட்டையால் அடிப்பார்கள் அவற்றையெல்லாம் பற்றி எங்களுக்கு பயமில்லை. எங்களது பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாங்கள் போராட்டம் செய்வோம். எனவே ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.