• Nov 26 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் மிகவும் பெறுமதியானது...!இரா.துரைரெட்னம் சுட்டிக்காட்டு...!

Sharmi / Jul 27th 2024, 2:25 pm
image

தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை அடைய வேண்டும் பெருமை கொள்கின்றோம் என ஈபிஆர்எல்எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இலங்கை அரசு தன்னுடைய வர்த்தமானியை விடுத்திருக்கின்றது தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த வர்த்தமானி ஊடாக எதிர் வருகின்ற எட்டாம் மாதம் 15 ஆம் திகதி  வேட்புமனு தாக்கல் செய்வதும் ஒன்பதாம் மாதம் 21 ஆம் திகதி தேர்தலும் நடக்க இருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

பல சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் ஜனாதிபதிக்கு ஆணையை வழங்கி மீண்டும் ஜனாதிபதிக்கு வாக்களித்து மக்கள் தெரிவு செய்யக்கூடிய ஜனநாயக சூழல் ஏற்பட்டிருக்கின்றது ஆகவே குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு வாழ் மக்கள் தங்களுக்கு உரிய வாக்குரிமைகளை அளித்து எதிர்காலத்தில் நாங்கள் சுதந்திரமாக வாழக்கூடியவாறு எந்த ஜனாதிபதி கடந்த காலத்தில் அநியாயம் செய்தவர்கள் யார் அநியாயம் செய்யாதவர்கள் யார் நியாயமானவர்கள் யார் நியாயமற்றவர்கள் யார் என்பவற்றை கவனத்தில் எடுத்து எமது மக்கள் தேர்தலில் நடந்து கொள்வார்கள்.

தற்சமயம் உங்களுக்கு தெரியும் வடக்கு கிழக்கில் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ் இன படுகொலைகள் வடக்கு கிழக்கு பிரிப்போம் மனித உரிமை மீறல்கள் திட்டமிட்ட குடியேற்றங்கள் அப்பாவி மக்களை கொலை செய்தது தொடக்கம் பல அநியாயங்களை செய்தவர்கள் கடந்த கால ஜனாதிபதி அவை அத்தனைக்கும் நியாயம் கேட்டு கடந்த நான்கு ஐந்து வருடங்களாக வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களாக இருக்கலாம் கடத்தப்பட்டவர்களாக இருக்கலாம் வளங்கள் அழிப்பு தொடர்பாக இருக்கலாம் காணிகள் விடுவிப்பு தொடர்பாக இருக்கலாம் அபிவிருத்தி தொடர்பான விடயங்களாக இருக்கலாம் நான் கேட்கின்றேன் தற்சமயம் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எந்த பிரச்சனைகளை குறிப்பாக வடக்கு கிழக்கு இன பிரச்சனையை கூட தீர்க்காத ஒரு ஜனாதிபதி எவ்வாறு எதிர்காலத்தில் தெரிவு செய்யப்பட்டு பிரச்சனையை தீர்க்கப் போகின்றார் என்கின்ற கேள்வியை வாக்காளர் முன் வைக்கின்றேன்.

நமக்காக உங்களுக்கு தெரியும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் ஏற்படுத்தப்பட்ட துன்ப துயரங்களில் இருந்து மீழ்வதற்காக இந்த விடயங்களை தமிழர்கள் ஒற்றுமைப்பட்டு கடந்த கால வலியினை வெளியில் கொண்டு வருவதற்காக சர்வதேச ரீதியாக தேசிய ரீதியாக மாவட்ட ரீதியாக இந்த விடயங்களை அம்பலப்படுத்துவதற்காக எந்த ஜனாதிபதியும் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை கடந்த காலத்தில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் ஆகவே நாங்கள் தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு நிற்கின்றோம்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வலியை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் என்பதற்காக முதல் படியாக ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்து எமது குரல்களை தெளிவுபடுத்துவதோ என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது அமைப்புகளும் ஒன்று சேர்ந்து சில முடிவுகளை எடுத்து இருக்கின்றது பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இது நமது ஆரம்பப்படி இவற்றில் பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுகின்றது அதை அந்த தலைமைகளும் அந்த அமைப்புகளும் கூடி முன்னேற்றகரமான முடிவுகளை எடுக்கும்.

தேர்தல் தொடர்பான விடயத்தில் ஒரு முன்னேற்றகரமான விடயத்தை அறிவிப்பார்கள் ஆனால் மக்களாகிய நாங்கள் தயாராக இருக்க வேண்டும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக தமிழ் மக்களின் அதிகார பரவல் தொடர்பாக வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக பொருளாதார கொள்கை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பாக மகாபலி காணி தொடர்பாக பலதரப்பட்ட விடயங்களை நாங்கள் எவ்வாறு இவர்கள் கையாள போகின்றார்கள் என்பதனை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் நடந்த மயிலத்தமடு மாதவனை பிரச்சனை கூட தீர்க்கப்படவில்லை கல்முனை தமிழ் பிரதேச செயலக தொடர்பான விடயங்கள் கூட தீர்க்கப்படவில்லை வீர முனை தொடர்பான விடைகளும் தீர்க்கப்படவில்லை இதே போன்று மாவட்ட ரீதியாக வளங்களை சூறையாடுவது வளங்களை அழிப்பது போன்ற பல தரப்பட்ட விடயங்கள் விகிதாசார ரீதியான அபிவிருத்தி வேலைகளை செய்வது போன்ற பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போன்ற பல விடயங்களை நாங்கள் எதிர்நோக்கி இருக்கின்றோம் இவைளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் காணப்படுகிறது.

எதிர்காலத்தில் இந்தத் தேர்தல் தொடர்பான விடயங்களில் இந்த விடயங்களில் நாம் வெற்றி கொள்ள முடியுமா என்பதனை ஆராயப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. ஆகவே எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் ஆனால் இன்று வடக்கு கிழக்கில் இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்தவரையில் தமிழரை வாக்குகள் மிகவும் பெருமதிக்க வாக்குகளாக மாறி இருக்கின்றது.

தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை அடைய வேண்டும் பெருமை கொள்கின்றோம்.

தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு தென் இலங்கையில் இருக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் ஓடி ஓடி தினம்தோறும் முகாம் இட்டு வடக்கு கிழக்கில் இருக்கின்ற சூழல் மாற்றமடைந்து இருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை அடைகின்றோம் எமது வாக்குகளை பெறுமதியான வாக்குகளாக பிரயோசனப்படுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் முன்னிட்டகரமான முடிவுகளை நாங்கள் எதிர்கொண்டு அதனை அமல் படுத்துவதற்கு நாங்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் இந்த விடயத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டு சேர்ந்து பொதுவான முடிவுகளை நாங்கள் எடுத்து முடிவுகளை அமல்படுத்த நாங்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றேன்.

இன்று உள்ள நிலைமைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஜனாதிபதி வேட்பாளர் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தொடர்பான பிரச்சார வேலைகளில் சில திணைக்களங்கள் அரச நிர்வாகத்தை பயன்படுத்தின்றனவா என்கின்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது.

உங்களுக்கு தெரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாகவே ரணில் விக்ரம் சிங்க ஆட்சிக்கு வந்தார் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கோட்டபாய அனைவரும் ஒரு கூட்டுக்குள் நிற்பவர்கள் இவர்கள்தான் தமிழ் மக்களுக்கு அநியாயத்தை விளைவித்தார்கள் நீங்கள் இவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக ஒவ்வொரு தமிழனையும் நாங்கள் சுயமாக இறக்க வைப்பதற்கான செயல் வடிவத்தினை வழங்குகின்றோம் அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குகின்றோம் எம்மை கொலை செய்கின்றவர்களுக்கும் கொலை செய்தவர்களுக்கும் கொலை செய்யப் போகின்றவர்களுக்கும் நாங்கள் அங்கீகாரம் வழங்கிவிடக் கூடாது.

ரணில் விக்கிரமசிங்கமாக இருக்கலாம் கோட்டபாயாக இருக்கலாம் மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க போகின்றோமா அவ்வாறு வாக்களிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வாக்குகளும் வீண்விரமாக சென்று விடும் என்பதனை மறந்து விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் மிகவும் பெறுமதியானது.இரா.துரைரெட்னம் சுட்டிக்காட்டு. தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை அடைய வேண்டும் பெருமை கொள்கின்றோம் என ஈபிஆர்எல்எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இலங்கை அரசு தன்னுடைய வர்த்தமானியை விடுத்திருக்கின்றது தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த வர்த்தமானி ஊடாக எதிர் வருகின்ற எட்டாம் மாதம் 15 ஆம் திகதி  வேட்புமனு தாக்கல் செய்வதும் ஒன்பதாம் மாதம் 21 ஆம் திகதி தேர்தலும் நடக்க இருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.பல சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் ஜனாதிபதிக்கு ஆணையை வழங்கி மீண்டும் ஜனாதிபதிக்கு வாக்களித்து மக்கள் தெரிவு செய்யக்கூடிய ஜனநாயக சூழல் ஏற்பட்டிருக்கின்றது ஆகவே குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு வாழ் மக்கள் தங்களுக்கு உரிய வாக்குரிமைகளை அளித்து எதிர்காலத்தில் நாங்கள் சுதந்திரமாக வாழக்கூடியவாறு எந்த ஜனாதிபதி கடந்த காலத்தில் அநியாயம் செய்தவர்கள் யார் அநியாயம் செய்யாதவர்கள் யார் நியாயமானவர்கள் யார் நியாயமற்றவர்கள் யார் என்பவற்றை கவனத்தில் எடுத்து எமது மக்கள் தேர்தலில் நடந்து கொள்வார்கள்.தற்சமயம் உங்களுக்கு தெரியும் வடக்கு கிழக்கில் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ் இன படுகொலைகள் வடக்கு கிழக்கு பிரிப்போம் மனித உரிமை மீறல்கள் திட்டமிட்ட குடியேற்றங்கள் அப்பாவி மக்களை கொலை செய்தது தொடக்கம் பல அநியாயங்களை செய்தவர்கள் கடந்த கால ஜனாதிபதி அவை அத்தனைக்கும் நியாயம் கேட்டு கடந்த நான்கு ஐந்து வருடங்களாக வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களாக இருக்கலாம் கடத்தப்பட்டவர்களாக இருக்கலாம் வளங்கள் அழிப்பு தொடர்பாக இருக்கலாம் காணிகள் விடுவிப்பு தொடர்பாக இருக்கலாம் அபிவிருத்தி தொடர்பான விடயங்களாக இருக்கலாம் நான் கேட்கின்றேன் தற்சமயம் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எந்த பிரச்சனைகளை குறிப்பாக வடக்கு கிழக்கு இன பிரச்சனையை கூட தீர்க்காத ஒரு ஜனாதிபதி எவ்வாறு எதிர்காலத்தில் தெரிவு செய்யப்பட்டு பிரச்சனையை தீர்க்கப் போகின்றார் என்கின்ற கேள்வியை வாக்காளர் முன் வைக்கின்றேன்.நமக்காக உங்களுக்கு தெரியும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் ஏற்படுத்தப்பட்ட துன்ப துயரங்களில் இருந்து மீழ்வதற்காக இந்த விடயங்களை தமிழர்கள் ஒற்றுமைப்பட்டு கடந்த கால வலியினை வெளியில் கொண்டு வருவதற்காக சர்வதேச ரீதியாக தேசிய ரீதியாக மாவட்ட ரீதியாக இந்த விடயங்களை அம்பலப்படுத்துவதற்காக எந்த ஜனாதிபதியும் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை கடந்த காலத்தில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் ஆகவே நாங்கள் தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு நிற்கின்றோம்.கடந்த காலத்தில் ஏற்பட்ட வலியை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் என்பதற்காக முதல் படியாக ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்து எமது குரல்களை தெளிவுபடுத்துவதோ என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது அமைப்புகளும் ஒன்று சேர்ந்து சில முடிவுகளை எடுத்து இருக்கின்றது பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இது நமது ஆரம்பப்படி இவற்றில் பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுகின்றது அதை அந்த தலைமைகளும் அந்த அமைப்புகளும் கூடி முன்னேற்றகரமான முடிவுகளை எடுக்கும்.தேர்தல் தொடர்பான விடயத்தில் ஒரு முன்னேற்றகரமான விடயத்தை அறிவிப்பார்கள் ஆனால் மக்களாகிய நாங்கள் தயாராக இருக்க வேண்டும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக தமிழ் மக்களின் அதிகார பரவல் தொடர்பாக வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக பொருளாதார கொள்கை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பாக மகாபலி காணி தொடர்பாக பலதரப்பட்ட விடயங்களை நாங்கள் எவ்வாறு இவர்கள் கையாள போகின்றார்கள் என்பதனை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் நடந்த மயிலத்தமடு மாதவனை பிரச்சனை கூட தீர்க்கப்படவில்லை கல்முனை தமிழ் பிரதேச செயலக தொடர்பான விடயங்கள் கூட தீர்க்கப்படவில்லை வீர முனை தொடர்பான விடைகளும் தீர்க்கப்படவில்லை இதே போன்று மாவட்ட ரீதியாக வளங்களை சூறையாடுவது வளங்களை அழிப்பது போன்ற பல தரப்பட்ட விடயங்கள் விகிதாசார ரீதியான அபிவிருத்தி வேலைகளை செய்வது போன்ற பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போன்ற பல விடயங்களை நாங்கள் எதிர்நோக்கி இருக்கின்றோம் இவைளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் காணப்படுகிறது.எதிர்காலத்தில் இந்தத் தேர்தல் தொடர்பான விடயங்களில் இந்த விடயங்களில் நாம் வெற்றி கொள்ள முடியுமா என்பதனை ஆராயப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. ஆகவே எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் ஆனால் இன்று வடக்கு கிழக்கில் இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்தவரையில் தமிழரை வாக்குகள் மிகவும் பெருமதிக்க வாக்குகளாக மாறி இருக்கின்றது.தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை அடைய வேண்டும் பெருமை கொள்கின்றோம்.தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு தென் இலங்கையில் இருக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் ஓடி ஓடி தினம்தோறும் முகாம் இட்டு வடக்கு கிழக்கில் இருக்கின்ற சூழல் மாற்றமடைந்து இருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை அடைகின்றோம் எமது வாக்குகளை பெறுமதியான வாக்குகளாக பிரயோசனப்படுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்.எதிர்காலத்தில் முன்னிட்டகரமான முடிவுகளை நாங்கள் எதிர்கொண்டு அதனை அமல் படுத்துவதற்கு நாங்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் இந்த விடயத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டு சேர்ந்து பொதுவான முடிவுகளை நாங்கள் எடுத்து முடிவுகளை அமல்படுத்த நாங்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றேன்.இன்று உள்ள நிலைமைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஜனாதிபதி வேட்பாளர் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தொடர்பான பிரச்சார வேலைகளில் சில திணைக்களங்கள் அரச நிர்வாகத்தை பயன்படுத்தின்றனவா என்கின்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது.உங்களுக்கு தெரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாகவே ரணில் விக்ரம் சிங்க ஆட்சிக்கு வந்தார் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கோட்டபாய அனைவரும் ஒரு கூட்டுக்குள் நிற்பவர்கள் இவர்கள்தான் தமிழ் மக்களுக்கு அநியாயத்தை விளைவித்தார்கள் நீங்கள் இவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக ஒவ்வொரு தமிழனையும் நாங்கள் சுயமாக இறக்க வைப்பதற்கான செயல் வடிவத்தினை வழங்குகின்றோம் அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குகின்றோம் எம்மை கொலை செய்கின்றவர்களுக்கும் கொலை செய்தவர்களுக்கும் கொலை செய்யப் போகின்றவர்களுக்கும் நாங்கள் அங்கீகாரம் வழங்கிவிடக் கூடாது.ரணில் விக்கிரமசிங்கமாக இருக்கலாம் கோட்டபாயாக இருக்கலாம் மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க போகின்றோமா அவ்வாறு வாக்களிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வாக்குகளும் வீண்விரமாக சென்று விடும் என்பதனை மறந்து விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement