• Sep 19 2024

சக மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும்! - டக்ளஸ் தெரிவிப்பு samugammedia

Chithra / Apr 15th 2023, 7:31 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

பண்ணை பகுதியில் இன்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவிற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் குறித்த சிலையை பார்வையிட்டார்.

நாகபூசணி அம்மனின் சிலை வியாழக்கிழமை இரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மனின் சிலைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,


இந்த நாட்டில் அனைத்து தரப்பும் சுதந்திரமாக வழிபடுவதற்கான நிலைமை காணப்படுகின்றது.

ஒவ்வொருவருடைய மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அது ஏனைய மதங்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தீடீர் தீடிரென சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது அதிகரித்து வருகின்ற நிலையில் அமைச்சர் குறித்த சிலையை பார்வையிட்டது பேசுபொருளாகியுள்ளது.


சக மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தெரிவிப்பு samugammedia யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.பண்ணை பகுதியில் இன்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவிற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் குறித்த சிலையை பார்வையிட்டார்.நாகபூசணி அம்மனின் சிலை வியாழக்கிழமை இரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மனின் சிலைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,இந்த நாட்டில் அனைத்து தரப்பும் சுதந்திரமாக வழிபடுவதற்கான நிலைமை காணப்படுகின்றது.ஒவ்வொருவருடைய மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அது ஏனைய மதங்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றார்.அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தீடீர் தீடிரென சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது அதிகரித்து வருகின்ற நிலையில் அமைச்சர் குறித்த சிலையை பார்வையிட்டது பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement