• Apr 27 2024

அனைவரது இரகசியங்களும் பதிவு செய்யப்படும்! கைபேசியை கண்டுபிடித்த விஞ்ஞானி வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 6:59 am
image

Advertisement

தற்போது உலகம் முழுவதும் கைபேசி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அனைவரது இரகசியங்களும் பதிவு செய்யப்படும் என கைபேசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கூறியுள்ளார்.

1970கள் வரையிலும் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பிற்கு தரை வழியான தொலைபேசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. 

1973ல் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்டின் கூப்பர் தான் முதன்முதலில் வயர் இணைப்பு அற்ற கைபேசியை கண்டுபிடித்தார்.


அப்போது பெரிய செங்கல் சைஸில் இருந்த கைபேசி தற்போது குறைந்து கையடக்கமாக மாறிவிட்டது. பேசுவதற்காக மட்டுமே பயன்பட்டு வந்த கைபேசி தற்போது அதிவேக இணைய சேவை, பல்வேறு வசதிகளுடன் ஒரு மினி உலகமாக மாறிவிட்ட நிலையில் சைபர் க்ரைம் ஆபத்துகளும் அதிகரித்துள்ளன.

பல்வேறு வகையில் உபயோகமாக உள்ள கைபேசி கொஞ்சம் தவறாக பயன்படுத்தினாலும் அழிவையும் தரவல்லதாக மாறி வருகிறது. இதுகுறித்து செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பரே கவலைப்பட்டுள்ளார்.

தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் உலக மொபைல் காங்கிரஸ் நடந்து வருகிறது. உலகம் முழுவதுமுள்ள கைபேசி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் பல புதிய நவீன கைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மார்டின் கூப்பர் “கைபேசியின் இருண்ட பக்கங்களை குறித்து நான் கவலைப்படுகிறேன். ஆனால் கைபேசியின் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும்” என கூறியுள்ளார். 

மார்ட்டின் கூப்பருக்கு தற்போது வயது 94. முதல் கைபேசி கண்டுபிடிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரது இரகசியங்களும் பதிவு செய்யப்படும் கைபேசியை கண்டுபிடித்த விஞ்ஞானி வெளியிட்ட தகவல் SamugamMedia தற்போது உலகம் முழுவதும் கைபேசி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அனைவரது இரகசியங்களும் பதிவு செய்யப்படும் என கைபேசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கூறியுள்ளார்.1970கள் வரையிலும் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பிற்கு தரை வழியான தொலைபேசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. 1973ல் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்டின் கூப்பர் தான் முதன்முதலில் வயர் இணைப்பு அற்ற கைபேசியை கண்டுபிடித்தார்.அப்போது பெரிய செங்கல் சைஸில் இருந்த கைபேசி தற்போது குறைந்து கையடக்கமாக மாறிவிட்டது. பேசுவதற்காக மட்டுமே பயன்பட்டு வந்த கைபேசி தற்போது அதிவேக இணைய சேவை, பல்வேறு வசதிகளுடன் ஒரு மினி உலகமாக மாறிவிட்ட நிலையில் சைபர் க்ரைம் ஆபத்துகளும் அதிகரித்துள்ளன.பல்வேறு வகையில் உபயோகமாக உள்ள கைபேசி கொஞ்சம் தவறாக பயன்படுத்தினாலும் அழிவையும் தரவல்லதாக மாறி வருகிறது. இதுகுறித்து செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பரே கவலைப்பட்டுள்ளார்.தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் உலக மொபைல் காங்கிரஸ் நடந்து வருகிறது. உலகம் முழுவதுமுள்ள கைபேசி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் பல புதிய நவீன கைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மார்டின் கூப்பர் “கைபேசியின் இருண்ட பக்கங்களை குறித்து நான் கவலைப்படுகிறேன். ஆனால் கைபேசியின் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும்” என கூறியுள்ளார். மார்ட்டின் கூப்பருக்கு தற்போது வயது 94. முதல் கைபேசி கண்டுபிடிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement