• Jan 26 2025

பெருந்தொகை பணமோசடி - இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது

Chithra / Dec 29th 2024, 11:07 am
image


பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொகை பணமோசடி - இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement