• Nov 22 2024

பரீட்சை வினாத்தாள் விவகாரம் - மேலுமொருவர் கைது..!samugammedia

Tharun / Jan 27th 2024, 4:25 pm
image

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பரீட்சை மண்டப பொறுப்பாளர், மண்டபப் பணியாளர் மற்றும் முதலில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பரீட்சை மண்டப பொறுப்பாளர் பிலியந்தலை பிராந்திய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை வினாத்தாள் விவகாரம் - மேலுமொருவர் கைது.samugammedia கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பரீட்சை மண்டப பொறுப்பாளர், மண்டபப் பணியாளர் மற்றும் முதலில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பரீட்சை மண்டப பொறுப்பாளர் பிலியந்தலை பிராந்திய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement