• Oct 03 2024

வற் வரியினால் பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை பகிரங்க படுத்திய நிதி அமைச்சு..!samugammedia

mathuri / Jan 10th 2024, 10:36 pm
image

Advertisement

வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை, மாறாக குறைவடைந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

வற் வரி தொடர்பில் நாடாளுமன்றம் கலக்கமடைந்துள்ள அளவுக்கு சந்தையில் கலக்கமேதும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்றையதினம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





வற் வரியினால் பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை பகிரங்க படுத்திய நிதி அமைச்சு.samugammedia வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை, மாறாக குறைவடைந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், வற் வரி தொடர்பில் நாடாளுமன்றம் கலக்கமடைந்துள்ள அளவுக்கு சந்தையில் கலக்கமேதும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்றையதினம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement