• Nov 28 2024

வவுனியாவில் பரபரப்பு...! கடவுச்சீட்டு பெறவந்த நபர் மரத்தில் ஏறி போராட்டம்...! samugammedia

Sharmi / Feb 2nd 2024, 11:27 am
image

வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி  மரணத்தை தழுவவுள்ளதாக கூறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51வயதுடைய  நபரொருவர் என்பவர் கடந்த மூன்று தினங்களாக வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வந்து சென்றதாகவும் எனினும் தனக்கு கடவுச்சீட்டை பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த குறித்த நபர் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இருந்த மரத்தில் ஏறி மரணத்தை தழுவவுள்ளதாக கூறி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதனால் அப்பகுதி பெரும் பதற்றமான  சூழ்நிலை உருவானது.

உடனடியாக செயல்பட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் அவருக்கு இன்றைய தினம் கடவுச்சீட்டு பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர். இதனை தொடர்ந்து குறித்த நபர் மரத்திலிருந்து கீழ் இறங்கியிருந்தார்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்நபர்,

தனக்கு காலில் நோய் ஒன்று இருப்பதாகவும் நீண்ட நேரம் தன்னால் நிற்க முடியாது எனவும்,  இருந்தும் கடவுச்சீட்டு பெறுவதற்காக கடந்த மூன்று தினங்களாக இவ்விடத்திலேயே தினமும் நிற்பதாவும், ஆனாலும் சில மாபியா குழுக்கள் இப்பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள குறித்த நபர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தாம் வரிசையில் நின்று இடங்களை பெற்று விற்பனை செய்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியதுடன் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்

இதேவேளை அப்பகுதியின் பிரதான வீதி ஒடுங்கிய வீதி என்பதால் வீதியின் இரு பகுதியிலும் வாகனங்கள் தரித்து நிற்பதுடன் புதிது புதிதாக கொட்டகை வியாபார நிலையங்களும் உருவாக்கியுள்ளன இதானல் அப்பகுதியால் பயணிப்பவர்கள் பெரும் சிரமத்துக்கும் உள்ளாகின்றனர் இது தொடர்பாக பலமுறை பொமக்களால் பொலிஸாருக்கும் உள்ளூராட்சி உதவி அணையாளருக்கும் அறிவித்தல் வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை சுகாதார சீர்கேடாகவே அப்பகுதியில் சிற்றுண்டிகள் விற்பனை செய்கின்றனர் எனவே எல்லாவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கும் சுகாதார பிரிவினரும் இவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டா நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள் எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

இதேவேளை அப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அரச விடுதி ஒன்றினுல் சமூக சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாகவும் அது தொடர்பாக குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு முறையிட்டும் எதுவிதமான் நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் பரபரப்பு. கடவுச்சீட்டு பெறவந்த நபர் மரத்தில் ஏறி போராட்டம். samugammedia வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி  மரணத்தை தழுவவுள்ளதாக கூறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51வயதுடைய  நபரொருவர் என்பவர் கடந்த மூன்று தினங்களாக வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வந்து சென்றதாகவும் எனினும் தனக்கு கடவுச்சீட்டை பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் விரக்தி அடைந்த குறித்த நபர் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இருந்த மரத்தில் ஏறி மரணத்தை தழுவவுள்ளதாக கூறி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.இதனால் அப்பகுதி பெரும் பதற்றமான  சூழ்நிலை உருவானது.உடனடியாக செயல்பட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் அவருக்கு இன்றைய தினம் கடவுச்சீட்டு பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர். இதனை தொடர்ந்து குறித்த நபர் மரத்திலிருந்து கீழ் இறங்கியிருந்தார்ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்நபர்,தனக்கு காலில் நோய் ஒன்று இருப்பதாகவும் நீண்ட நேரம் தன்னால் நிற்க முடியாது எனவும்,  இருந்தும் கடவுச்சீட்டு பெறுவதற்காக கடந்த மூன்று தினங்களாக இவ்விடத்திலேயே தினமும் நிற்பதாவும், ஆனாலும் சில மாபியா குழுக்கள் இப்பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள குறித்த நபர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தாம் வரிசையில் நின்று இடங்களை பெற்று விற்பனை செய்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியதுடன் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்இதேவேளை அப்பகுதியின் பிரதான வீதி ஒடுங்கிய வீதி என்பதால் வீதியின் இரு பகுதியிலும் வாகனங்கள் தரித்து நிற்பதுடன் புதிது புதிதாக கொட்டகை வியாபார நிலையங்களும் உருவாக்கியுள்ளன இதானல் அப்பகுதியால் பயணிப்பவர்கள் பெரும் சிரமத்துக்கும் உள்ளாகின்றனர் இது தொடர்பாக பலமுறை பொமக்களால் பொலிஸாருக்கும் உள்ளூராட்சி உதவி அணையாளருக்கும் அறிவித்தல் வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை சுகாதார சீர்கேடாகவே அப்பகுதியில் சிற்றுண்டிகள் விற்பனை செய்கின்றனர் எனவே எல்லாவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கும் சுகாதார பிரிவினரும் இவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டா நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள் எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்இதேவேளை அப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அரச விடுதி ஒன்றினுல் சமூக சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாகவும் அது தொடர்பாக குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு முறையிட்டும் எதுவிதமான் நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement