• Nov 24 2024

இந்தோனேசியாவில் வெடி விபத்து - 13 பேர்..!!Samugammedia

Tamil nila / Dec 24th 2023, 8:48 pm
image

இந்தோனேசியாவில் நிக்கல் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு, 38 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தனியார் தொழிற்சாலை வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இங்கு நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை ஒன்றும் செயல்பட்டு வந்தது. 

இந்த நிக்கல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் சிலர் புகைப்போக்கிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த புகை போக்கிகளிலும் வெடி விபத்து நிகழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இருப்பினும் அதற்குள் 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு 38க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழந்த 13 பேரில் 7 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள். 6 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். 

இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையாக தெரிய வராத நிலையில், தூய்மை பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தால் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் வெடி விபத்து - 13 பேர்.Samugammedia இந்தோனேசியாவில் நிக்கல் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு, 38 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தனியார் தொழிற்சாலை வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை ஒன்றும் செயல்பட்டு வந்தது. இந்த நிக்கல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் சிலர் புகைப்போக்கிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த புகை போக்கிகளிலும் வெடி விபத்து நிகழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அதற்குள் 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு 38க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.உயிரிழந்த 13 பேரில் 7 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள். 6 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையாக தெரிய வராத நிலையில், தூய்மை பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தால் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement