• Sep 20 2024

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் வெடிகுண்டுகள்?...! பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கம்..!samugammedia

Sharmi / Jul 15th 2023, 10:25 am
image

Advertisement

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் வெடிகுண்டுகளோ, தோட்டாக்களோ மற்றும் வெடிமருந்துக்களோ கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதாவது, 08.07.2023 முல்லைதீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் போது, வெடிகுண்டுகள், மற்றும் தோட்டாக்கள் போன்றன கிடைக்க பெற்றதாக  சில ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில்,  இது குறித்து  பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த மனித புதைகுழி அகழ்வின் போது, அவ்வாறான வெடி மருந்துக்களோ, வெடி குண்டுகளோ அல்லது துப்பாக்கி ரவைகளோ கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 06 ஆம் திகதி மாத்திரமே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 08 ஆம் திகதி அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், அந்த புதைகுழியை மீண்டும் தோண்டுவது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் வெடிகுண்டுகள். பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கம்.samugammedia முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் வெடிகுண்டுகளோ, தோட்டாக்களோ மற்றும் வெடிமருந்துக்களோ கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதாவது, 08.07.2023 முல்லைதீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் போது, வெடிகுண்டுகள், மற்றும் தோட்டாக்கள் போன்றன கிடைக்க பெற்றதாக  சில ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில்,  இது குறித்து  பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவ்வாறு பதிலளித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்த மனித புதைகுழி அகழ்வின் போது, அவ்வாறான வெடி மருந்துக்களோ, வெடி குண்டுகளோ அல்லது துப்பாக்கி ரவைகளோ கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த 06 ஆம் திகதி மாத்திரமே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 08 ஆம் திகதி அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அந்த புதைகுழியை மீண்டும் தோண்டுவது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement