• May 03 2024

இலங்கையின் மீன் உற்பத்திகள் ஜப்பானுக்கு ஏற்றுமதி?

Chithra / Feb 8th 2023, 1:51 pm
image

Advertisement

இலங்கையின் மீன் உற்பத்திகளை ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இடம் வழங்குமாறு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா வெளிநாட்டு வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெப்ரவரி 2, 2023 அன்று ஜப்பானின் ஒசாகா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தனிப்பட்ட அழைப்பின் பேரில் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா, இந்த சந்தர்ப்பத்தை கௌரவமாக கருதுவதாக தெரிவித்தார்.

மேலும், மீன்பிடி உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி சந்தையை விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கு இந்த மாநாடு நல்லதொரு வாய்ப்பாக அமைந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, ஏற்றுமதி சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இலங்கையின் விசேட அக்கறை குறித்து மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா மேலும் விளக்கமளித்துள்ளார்.

இங்கு பல வர்த்தகர்கள் இலங்கை மீது கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மீன் உற்பத்திகள் ஜப்பானுக்கு ஏற்றுமதி இலங்கையின் மீன் உற்பத்திகளை ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இடம் வழங்குமாறு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா வெளிநாட்டு வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.பெப்ரவரி 2, 2023 அன்று ஜப்பானின் ஒசாகா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.தனிப்பட்ட அழைப்பின் பேரில் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா, இந்த சந்தர்ப்பத்தை கௌரவமாக கருதுவதாக தெரிவித்தார்.மேலும், மீன்பிடி உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி சந்தையை விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கு இந்த மாநாடு நல்லதொரு வாய்ப்பாக அமைந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, ஏற்றுமதி சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இலங்கையின் விசேட அக்கறை குறித்து மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா மேலும் விளக்கமளித்துள்ளார்.இங்கு பல வர்த்தகர்கள் இலங்கை மீது கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement