• May 13 2024

மத்திய மலைநாட்டில் கடும் வெப்பம்:நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு!SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 6:01 pm
image

Advertisement

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது.

இதனால் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்க மான மவுஸ்சாக்கலை நீர் தேக்கதின் நீர் மட்டம் இன்று 13. 02.2023 அன்று மதியம் வரை நீர் தேக்கத்தின் அதன் கொள்ளளவை விட சுமார் 19 அடி குறைந்த நிலையில் உள்ளது.

இந்த நீர் தேக்க மூலம் கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான  ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கம் இதுவாகும் என நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 21 அடி குறைந்த நிலையில் உள்ளது எனவும் மேலும் இந்த வரட்சி தொடருமானால் மின் வெட்டு ஏற்படும் அபாயத்தை இலங்கை வாழ் மக்கள் அனுபவிக்க நேரிடும் என அந்த அதிகாரி கூறினார்.



மத்திய மலைநாட்டில் கடும் வெப்பம்:நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவுSamugamMedia கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. இதனால் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்க மான மவுஸ்சாக்கலை நீர் தேக்கதின் நீர் மட்டம் இன்று 13. 02.2023 அன்று மதியம் வரை நீர் தேக்கத்தின் அதன் கொள்ளளவை விட சுமார் 19 அடி குறைந்த நிலையில் உள்ளது.இந்த நீர் தேக்க மூலம் கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான  ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கம் இதுவாகும் என நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 21 அடி குறைந்த நிலையில் உள்ளது எனவும் மேலும் இந்த வரட்சி தொடருமானால் மின் வெட்டு ஏற்படும் அபாயத்தை இலங்கை வாழ் மக்கள் அனுபவிக்க நேரிடும் என அந்த அதிகாரி கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement