• Sep 20 2024

இந்தியப் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! SamugamMedia

Chithra / Feb 21st 2023, 10:52 am
image

Advertisement

இந்தியப் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியுள்ளதாக சர்வதேச விண்வெளி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தப் புயல் இன்றைய தினம் மொரிஷியசை (Mauritius) தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாகத் தாக்கும், கடும் மழை, வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தென் ஆபிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் உச்சக்கட்ட தயார் நடவடிக்கையில் உள்ளன. 

புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியைச் சர்வதேச விண்வெளி நிலையம் காணொளி பிடித்திருக்கிறது.

ஆக்ரோஷ சூறாவளி புயல் நகரும் காட்சி வேகமாகப் பரவி வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. SamugamMedia இந்தியப் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியுள்ளதாக சர்வதேச விண்வெளி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் இன்றைய தினம் மொரிஷியசை (Mauritius) தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாகத் தாக்கும், கடும் மழை, வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென் ஆபிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் உச்சக்கட்ட தயார் நடவடிக்கையில் உள்ளன. புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியைச் சர்வதேச விண்வெளி நிலையம் காணொளி பிடித்திருக்கிறது.ஆக்ரோஷ சூறாவளி புயல் நகரும் காட்சி வேகமாகப் பரவி வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement