• Apr 27 2024

900 நோயாளிகளை ஏமாற்றிய போலி தாதி! அதிர்ச்சி தகவல்!

Tamil nila / Feb 3rd 2023, 7:23 am
image

Advertisement

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்த்தில் பெண் ஒருவர் போலி தாதி வேடமிட்டு சுமார் 900 நோயாளிகளை ஏமாற்றியுள்ளார்.


51 வயதான பிரிகிட்டி க்லாரொக்ஸ் (Brigitte Cleroux) என்ற பெண்ணே இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளை ஏமாற்றியுள்ளார்.


பிரட்டிஸ் கொலம்பியாவின் பெண்கள் மருத்துவ மனையொன்றில் இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டில் பதிவாகியுள்ளது.


நோயாளிகளை ஏமாற்றி தாதி சேவை வழங்கிய குறித்த பெண்ணுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.



இவ்வாறு சேவை வழங்கிய மருத்துவ மனைக்கு எதிராக நோயாளிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மருத்துவமனையின் கவனயீனமே இந்த நிலைமைக்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



எதிர்வரும் காலங்களில் மருத்துவ மனைகளில் பணிக்கு அமர்த்தப்படும் தாதியர்கள் அவர்களது பெயர் மற்றும் அனுமதிப்பத்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.


நோயாளர்களை தாக்கியமை உள்ளிட்ட 67 குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் குறித்த பெண்ணுக்கு எதிராக சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.



வேறும் ஓர் தாதியின் பெயரில் விண்ணப்பம் செய்து மோசடியான முறையில் மருத்துவமனையில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

900 நோயாளிகளை ஏமாற்றிய போலி தாதி அதிர்ச்சி தகவல் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்த்தில் பெண் ஒருவர் போலி தாதி வேடமிட்டு சுமார் 900 நோயாளிகளை ஏமாற்றியுள்ளார்.51 வயதான பிரிகிட்டி க்லாரொக்ஸ் (Brigitte Cleroux) என்ற பெண்ணே இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளை ஏமாற்றியுள்ளார்.பிரட்டிஸ் கொலம்பியாவின் பெண்கள் மருத்துவ மனையொன்றில் இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டில் பதிவாகியுள்ளது.நோயாளிகளை ஏமாற்றி தாதி சேவை வழங்கிய குறித்த பெண்ணுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இவ்வாறு சேவை வழங்கிய மருத்துவ மனைக்கு எதிராக நோயாளிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.மருத்துவமனையின் கவனயீனமே இந்த நிலைமைக்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் மருத்துவ மனைகளில் பணிக்கு அமர்த்தப்படும் தாதியர்கள் அவர்களது பெயர் மற்றும் அனுமதிப்பத்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.நோயாளர்களை தாக்கியமை உள்ளிட்ட 67 குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் குறித்த பெண்ணுக்கு எதிராக சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.வேறும் ஓர் தாதியின் பெயரில் விண்ணப்பம் செய்து மோசடியான முறையில் மருத்துவமனையில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement