• Sep 19 2024

இலங்கையில் உருவாகும் போலி தலதா மாளிகை! - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

Chithra / Jan 4th 2023, 1:12 pm
image

Advertisement

குருநாகல் – வாதகட வீதியின் பொத்துஹெர பகுதியில் போலியான தலதா மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அஸ்கிரி – மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, எழுதியுள்ள கடிதத்திலேயே அஸ்கிரி – மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.


பொத்துஹெர பகுதியில் ஜனக்க சேனாதிபதி என்ற நபரினால், இந்த போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றமை குறித்தும் அரிய கிடைத்துள்ளதாக மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


அதுமட்டுமல்லாமல் பௌத்த மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவது தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் இவ்வாறான பௌத்த விரோதச் செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம், மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இலங்கையில் உருவாகும் போலி தலதா மாளிகை - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் குருநாகல் – வாதகட வீதியின் பொத்துஹெர பகுதியில் போலியான தலதா மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அஸ்கிரி – மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, எழுதியுள்ள கடிதத்திலேயே அஸ்கிரி – மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.பொத்துஹெர பகுதியில் ஜனக்க சேனாதிபதி என்ற நபரினால், இந்த போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றமை குறித்தும் அரிய கிடைத்துள்ளதாக மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் பௌத்த மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவது தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் இவ்வாறான பௌத்த விரோதச் செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம், மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement