முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மாவீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச பகுதியில் உள்ள சம்பூர் கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் குடும்ப உறவுகள் கௌரவிக்கப்பட்டார்கள். தென்னங்கன்றுகள் வழங்கி அவர்களின் நினைவாக நினைவஞ்சலி செலுத்தி கௌரவிக்கப்பட்டார்கள்.ஈகை சுடரேற்றி அக வணக்கமும் மாவீரர்களுக்காக இதன்போது செலுத்தப்பட்டன. மாவீரர் நினைவஞ்சலி தினமானது நவம்பர் 21-27 வரை அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்து உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தங்களது பிள்ளைகளை இழந்து தவிர்பதை அறிவேன் நாம் இதன் மூலம் மனம் தளராமல் இரிப்போம். என்னாலான பணிகளை உங்களுக்காக செய்வேன்- என்கிறார்.
மூதூர் பிரதேச பகுதியில் மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மாவீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச பகுதியில் உள்ள சம்பூர் கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் குடும்ப உறவுகள் கௌரவிக்கப்பட்டார்கள். தென்னங்கன்றுகள் வழங்கி அவர்களின் நினைவாக நினைவஞ்சலி செலுத்தி கௌரவிக்கப்பட்டார்கள்.ஈகை சுடரேற்றி அக வணக்கமும் மாவீரர்களுக்காக இதன்போது செலுத்தப்பட்டன. மாவீரர் நினைவஞ்சலி தினமானது நவம்பர் 21-27 வரை அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தங்களது பிள்ளைகளை இழந்து தவிர்பதை அறிவேன் நாம் இதன் மூலம் மனம் தளராமல் இரிப்போம். என்னாலான பணிகளை உங்களுக்காக செய்வேன்- என்கிறார்.