• Nov 26 2024

இறந்து போன மகளுக்கு மாப்பிள்ளை தேடி விளம்பரப்படுத்திய குடும்பத்தினர் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

Tharun / May 13th 2024, 6:52 pm
image

முப்பது ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தனது மகளுக்கு பொருத்தமான “ஆவி மாப்பிளை” தேடி குடும்பத்தினர் பத்திரிக்கையில் விளம்பரம் செய்த விசித்திர சம்பவம் கர்நாடகாவில் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றே இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளது.

குறித்தப் பகுதியில் “குலே மடிமே” என்ற இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு இடையேயான திருமணம் செய்துவைக்கும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இறந்துப்போன தனது மகளுக்கு, குலாலர் சாதி மற்றும் பங்கேரா கோத்திரத்தைச் சேர்ந்த மணமகளை தேடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் இறந்துப்போன மணமகன் இருந்தால் “குலே மடிமே” நிகழ்வை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டு தொடர்புகொள்ள வேண்டிய தகவலுடன் விளம்பரம் முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளம்பரம் செய்யப்பட்டதில் இருந்து குறைந்தது 50 பேர் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக விளம்பரம் செய்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சடங்குகளை செய்தவற்கான திகதியை விரைவில் முடிவுசெய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களாக சடங்கிற்கு பொருத்தமான ஒருவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், “விளம்பரத்தை பிரசுரித்த போது, நாங்கள் கேலி செய்யப்படுவோம் என்று நாங்கள் கவலைப்பட்டோம், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, சடங்கு பற்றிய விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது. என  குடும்ப உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்து போன மகளுக்கு மாப்பிள்ளை தேடி விளம்பரப்படுத்திய குடும்பத்தினர் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் முப்பது ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தனது மகளுக்கு பொருத்தமான “ஆவி மாப்பிளை” தேடி குடும்பத்தினர் பத்திரிக்கையில் விளம்பரம் செய்த விசித்திர சம்பவம் கர்நாடகாவில் பதிவாகியுள்ளது.கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றே இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளது.குறித்தப் பகுதியில் “குலே மடிமே” என்ற இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு இடையேயான திருமணம் செய்துவைக்கும் நடைமுறையில் இருந்து வருகின்றது.இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இறந்துப்போன தனது மகளுக்கு, குலாலர் சாதி மற்றும் பங்கேரா கோத்திரத்தைச் சேர்ந்த மணமகளை தேடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.30 ஆண்டுகளுக்கு முன் இறந்துப்போன மணமகன் இருந்தால் “குலே மடிமே” நிகழ்வை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டு தொடர்புகொள்ள வேண்டிய தகவலுடன் விளம்பரம் முடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விளம்பரம் செய்யப்பட்டதில் இருந்து குறைந்தது 50 பேர் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக விளம்பரம் செய்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மேலும், சடங்குகளை செய்தவற்கான திகதியை விரைவில் முடிவுசெய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.கடந்த ஐந்து வருடங்களாக சடங்கிற்கு பொருத்தமான ஒருவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், “விளம்பரத்தை பிரசுரித்த போது, நாங்கள் கேலி செய்யப்படுவோம் என்று நாங்கள் கவலைப்பட்டோம், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, சடங்கு பற்றிய விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது. என  குடும்ப உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement