• Apr 24 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: யாழில் அதிகரிக்கும் தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள்..!

Sharmi / Apr 24th 2025, 9:04 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக  யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: யாழில் அதிகரிக்கும் தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக  யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement