• Apr 17 2025

புத்தாண்டு தினத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி

Chithra / Apr 15th 2025, 3:26 pm
image


மாத்தளை - மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹகொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மாஹவெல - மடவல உல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் புத்தாண்டு தினத்தை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக வீட்டு மாடியில் பொருட்களை ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி மாத்தளை - மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹகொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல  பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது.மாஹவெல - மடவல உல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர் புத்தாண்டு தினத்தை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக வீட்டு மாடியில் பொருட்களை ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement