• Jan 16 2025

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

Chithra / Jan 14th 2025, 2:55 pm
image


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வீட்டில் வழமையான செயற்பாட்டில்  ஈடுபட்ட வேளை மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

60 வயதுடைய குடும்பஸ்தரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு சென்னக்கிராமம் பகுதி   மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வீட்டில் வழமையான செயற்பாட்டில்  ஈடுபட்ட வேளை மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.60 வயதுடைய குடும்பஸ்தரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மரணமடைந்தவர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு சென்னக்கிராமம் பகுதி   மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement