• Apr 13 2025

மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

Sharmi / Apr 9th 2025, 1:54 pm
image

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம் காலை தனது வீட்டில் உள்ள காற்று அழுத்தும் இயந்திரம் மூலமாக முச்சக்கர வண்டியை சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்த போது தவறுதலாக மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச் சம்பவத்தில் பன்றிக்கெய்தகுளம் பகுதியை சேர்ந்த 50 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு. வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம் காலை தனது வீட்டில் உள்ள காற்று அழுத்தும் இயந்திரம் மூலமாக முச்சக்கர வண்டியை சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்த போது தவறுதலாக மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இச் சம்பவத்தில் பன்றிக்கெய்தகுளம் பகுதியை சேர்ந்த 50 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement