• Jan 23 2025

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்; சாரதி கைது..!

Sharmi / Dec 16th 2024, 8:02 pm
image

யாழில் இடம்பெற்ற வாக விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் குறித்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளவாலை பகுதியில் நேற்று(15) மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகனான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதான மோ.பாக்கியநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இருவரும் நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பற்றிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றிருந்தனர். 

இதன்போது தனியார் பேருந்து ஒன்று வீதியால் சென்றுகொண்டிருந்தபோது தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளார். மகன் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி  தப்பிச் சென்ற நிலையில், இளவாலை பொலிஸார் அவரை இன்று கைது செய்தனர். 

குடும்பஸ்தரின் மரணம் குறித்தான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்; சாரதி கைது. யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் குறித்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இளவாலை பகுதியில் நேற்று(15) மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகனான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதான மோ.பாக்கியநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த இருவரும் நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பற்றிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றிருந்தனர். இதன்போது தனியார் பேருந்து ஒன்று வீதியால் சென்றுகொண்டிருந்தபோது தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியது.இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளார். மகன் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி  தப்பிச் சென்ற நிலையில், இளவாலை பொலிஸார் அவரை இன்று கைது செய்தனர். குடும்பஸ்தரின் மரணம் குறித்தான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement