• Jun 25 2024

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்..! samugammedia

Chithra / Sep 25th 2023, 3:21 pm
image

Advertisement

 

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன், மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச்  சந்தித்துக் கலந்துறையாடிய போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்ச்சியை  நடத்தவுள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த இசை நிகழ்வு இருக்கும் என நம்புகிறேன்.

இந்த இசை நிகழ்வு முற்றிலும் இலவசமானது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினையும் நிகழ்வாக இருக்கும்.  அடுத்து வரும் நாட்களின் நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்புக்கள் தொடர்ந்து வரும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள இசைத்துறை சார்ந்தவர்களையும் , எனது குழுவையும் ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் நடாத்தும் இந்த இசை நிகழ்வும இலங்கை தாண்டி வெளிநாடுகளில் உள்ளவர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர். samugammedia  “யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன், மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச்  சந்தித்துக் கலந்துறையாடிய போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்ச்சியை  நடத்தவுள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த இசை நிகழ்வு இருக்கும் என நம்புகிறேன்.இந்த இசை நிகழ்வு முற்றிலும் இலவசமானது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினையும் நிகழ்வாக இருக்கும்.  அடுத்து வரும் நாட்களின் நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்புக்கள் தொடர்ந்து வரும்.புலம்பெயர் நாடுகளில் உள்ள இசைத்துறை சார்ந்தவர்களையும் , எனது குழுவையும் ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் நடாத்தும் இந்த இசை நிகழ்வும இலங்கை தாண்டி வெளிநாடுகளில் உள்ளவர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement