• Jan 13 2025

இந்தியாவின் பிரபல தபேலா கலைஞர் ஸாக்கிர் ஹுசைன் காலமானார்

Tharmini / Dec 16th 2024, 10:19 am
image

இந்தியாவைச் சேர்ந்த உலகப்பிரபல தபேலா கலைஞரான ஸாக்கிர் ஹுசைன் காலமானார், அவருக்கு வயது 73.

நுரையீரல் பிரச்சினைக்கு ஆளாகி அதன் காரணமாக தலைதூக்கிய சிக்கல்களால் ஹுசைன் காலமானார் என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் அத்தகவலை வெளியிட்டன.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹுசைன் நேற்று (15) காலமானார். 

இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலம் மோசமடைந்ததையொட்டி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

முன்னணி அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், வர்த்தகர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் ஹுசைனுக்கு மரியாதை தெரிவித்துக்கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

நேற்று (15)  முன்னதாக ஹுசைன், இதயப் பிரச்சினைகளுக்கு ஆளானதாகவும் அதன் காரணமாக அவர் சான் ஃபிர்ன்சிஸ்கோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராக்கே‌ஷ் சாவ்ராசியா தெரிவித்திருந்தார்.

பின்னர் ஹுசைன் காலமாகிவிட்டார் என்ற செய்தி வெளியாகத் தொடங்கியது. 

எனினும், அவரின் விளம்பரச் செயலாளர் அத்தகவலை முன்னதாக மறுத்தார்.

பின்னர் அதிகாரபூர்வ அறிக்கையில் ஹுசைனின் குடும்பம் அவரின் மறைவை உறுதிப்படுத்தியது.

“ஆசான், வழிகாட்டி, ஆசிரியராக அவர் ஆற்றிய அபாரப் பணிகள் எண்ணிலடங்கா இசைக் கலைஞர்களிடையே அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த தலைமுறை மேலும் சிறப்பாகச் செய்வதற்கு ஊக்குவிக்க அவர் விரும்பினார். 


கலைத் தூதராகவும் வரலாற்றில் ஆகச் சிறப்பான இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அவர் நிகரற்ற சகாப்தத்தைப் படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபல தபேலா கலைஞர் ஸாக்கிர் ஹுசைன் காலமானார் இந்தியாவைச் சேர்ந்த உலகப்பிரபல தபேலா கலைஞரான ஸாக்கிர் ஹுசைன் காலமானார், அவருக்கு வயது 73.நுரையீரல் பிரச்சினைக்கு ஆளாகி அதன் காரணமாக தலைதூக்கிய சிக்கல்களால் ஹுசைன் காலமானார் என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் அத்தகவலை வெளியிட்டன.அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹுசைன் நேற்று (15) காலமானார். இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலம் மோசமடைந்ததையொட்டி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.முன்னணி அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், வர்த்தகர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் ஹுசைனுக்கு மரியாதை தெரிவித்துக்கொண்டனர்.எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி ஆகியோர் அவர்களில் அடங்குவர்.நேற்று (15)  முன்னதாக ஹுசைன், இதயப் பிரச்சினைகளுக்கு ஆளானதாகவும் அதன் காரணமாக அவர் சான் ஃபிர்ன்சிஸ்கோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராக்கே‌ஷ் சாவ்ராசியா தெரிவித்திருந்தார்.பின்னர் ஹுசைன் காலமாகிவிட்டார் என்ற செய்தி வெளியாகத் தொடங்கியது. எனினும், அவரின் விளம்பரச் செயலாளர் அத்தகவலை முன்னதாக மறுத்தார்.பின்னர் அதிகாரபூர்வ அறிக்கையில் ஹுசைனின் குடும்பம் அவரின் மறைவை உறுதிப்படுத்தியது.“ஆசான், வழிகாட்டி, ஆசிரியராக அவர் ஆற்றிய அபாரப் பணிகள் எண்ணிலடங்கா இசைக் கலைஞர்களிடையே அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அடுத்த தலைமுறை மேலும் சிறப்பாகச் செய்வதற்கு ஊக்குவிக்க அவர் விரும்பினார். கலைத் தூதராகவும் வரலாற்றில் ஆகச் சிறப்பான இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அவர் நிகரற்ற சகாப்தத்தைப் படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement