• Apr 18 2026

பண்ணைப் பகுதி வாள்வெட்டுச் சம்பவம் - கைக்குண்டுடன் இளைஞன் கைது

Chithra / Apr 4th 2026, 8:54 am
image

யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில்  இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 


கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே, மருதனார்மடம் பகுதியில் வைத்து நேற்றைய தினம் (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 


கடந்த 26ஆம் திகதி பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி, அவரைக் காயப்படுத்தியதுடன் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டுச் சென்ற கும்பலில் ஒருவராக இவர் செயற்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


மேலும், யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் முக்கிய உறுப்பினராகச் செயற்படும் இந்த இளைஞருக்கு அண்மையிலேயே திருமணம் நடைபெற்றுள்ளதுடன், அவர் மருதனார்மடம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பண்ணைப் பகுதி வாள்வெட்டுச் சம்பவம் - கைக்குண்டுடன் இளைஞன் கைது யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில்  இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே, மருதனார்மடம் பகுதியில் வைத்து நேற்றைய தினம் (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 26ஆம் திகதி பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி, அவரைக் காயப்படுத்தியதுடன் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டுச் சென்ற கும்பலில் ஒருவராக இவர் செயற்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் முக்கிய உறுப்பினராகச் செயற்படும் இந்த இளைஞருக்கு அண்மையிலேயே திருமணம் நடைபெற்றுள்ளதுடன், அவர் மருதனார்மடம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement