• Nov 22 2025

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பலத்த சேதம்; மயிரிழையில் உயிர் தப்பிய விவசாயி

Chithra / Nov 22nd 2025, 4:17 pm
image


திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த கிராமத்தில் மாலை வேலையில் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து விட்டு செல்வதாக தெரிவிக்கின்றனர். 

பாலம் போட்டாறு, பத்தினிபுரம், இக்பால் நகர் கிராம மக்களின் அன்றாட தொழிலாக தோட்டச் செய்கை, விவசாயம் என காணப்படுகிறது.

காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் மேட்டு நிலப்பயிர்கள் உட்பட நெற்செய்கை விவசாயத்தையும் நாசமாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்னை, வாழை உட்பட பல பயிரினங்களையும் துவம்சம் செய்துள்ளதாகவும் துவிச்சக்கர வண்டியில் வந்த விவசாயி ஒருவரை தாக்க முற்பட்ட போது தான் துவிச்சக்கர வண்டியை விட்டு ஓடியதில் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.

குறித்த கிராமத்தின் பிரதான வீதியில் யானை வேலி அமைத்தாலும் ஊருக்குல் படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்தி தங்களது உயிர்களை உடமைகளை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

அத்துடன் பெரும்போக நெற் செய்கை விதைத்து 45 நாட்களை கடந்துள்ள நிலையில் நெற்பயிர்ச் செய்கையையும் அழித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தங்களது பிள்ளைகளை வைத்து கொண்டு இரவு நேரங்களில் பீதியுடன் தூங்க வேண்டியுள்ளதாவும் பாடசாலைகளுக்கு அனுப்பவும் பயத்துடனான நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து உயிர்களை பாதுகாக்க உரிய உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பலத்த சேதம்; மயிரிழையில் உயிர் தப்பிய விவசாயி திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.குறித்த கிராமத்தில் மாலை வேலையில் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து விட்டு செல்வதாக தெரிவிக்கின்றனர். பாலம் போட்டாறு, பத்தினிபுரம், இக்பால் நகர் கிராம மக்களின் அன்றாட தொழிலாக தோட்டச் செய்கை, விவசாயம் என காணப்படுகிறது.காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் மேட்டு நிலப்பயிர்கள் உட்பட நெற்செய்கை விவசாயத்தையும் நாசமாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.தென்னை, வாழை உட்பட பல பயிரினங்களையும் துவம்சம் செய்துள்ளதாகவும் துவிச்சக்கர வண்டியில் வந்த விவசாயி ஒருவரை தாக்க முற்பட்ட போது தான் துவிச்சக்கர வண்டியை விட்டு ஓடியதில் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.குறித்த கிராமத்தின் பிரதான வீதியில் யானை வேலி அமைத்தாலும் ஊருக்குல் படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்தி தங்களது உயிர்களை உடமைகளை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.அத்துடன் பெரும்போக நெற் செய்கை விதைத்து 45 நாட்களை கடந்துள்ள நிலையில் நெற்பயிர்ச் செய்கையையும் அழித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.தங்களது பிள்ளைகளை வைத்து கொண்டு இரவு நேரங்களில் பீதியுடன் தூங்க வேண்டியுள்ளதாவும் பாடசாலைகளுக்கு அனுப்பவும் பயத்துடனான நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர். காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து உயிர்களை பாதுகாக்க உரிய உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement