• Nov 05 2024

வேகமாகப் பரவும் நோய்; பன்றி இறைச்சி வைத்திருந்தால் சட்டம் பாயுமென எச்சரிக்கை

Chithra / Oct 30th 2024, 11:43 am
image

Advertisement

 

 

பன்றிகள் மத்தியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் ) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் "தொற்று" அல்லது "சந்தேகத்திற்குரிய" பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, 

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பன்றிகள் அல்லது பன்றி இறைச்சி பொருட்களை கொண்டு செல்வது, பன்றிகளை அறுப்பது, பன்றிகளை செயற்கையாக இனப்பெருக்கம் செய்தல், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல் மற்றும் தொற்றுள்ள பாதிக்கப்பட்ட விலங்குகளின் சடலங்களை நீர்நிலைகளில் அல்லது வழிகளில் அப்புறப்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்படும்.

விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் கே.ஏ.சி.எச் அபேரத்ன கொத்தலாவலவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வந்த உத்தரவு, ASF மற்றும் போர்சின் இனப்பெருக்க மற்றும் சுவாச நோய்க்குறி (PRRS) பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்திக் காட்டுகிறது.

இவ்விரு நோய்களும் தீவரமாகத் தொற்றக்கூடியவை மற்றும் பன்றி வளர்ப்புத் தொழிலில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.

இந்த நிலையில், பன்றி இறைச்சியை வைத்திருப்பவர்கள் சட்ட நடவடிக்கைக்கு முகம் கொடுக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன  தெரிவித்தார்.


வேகமாகப் பரவும் நோய்; பன்றி இறைச்சி வைத்திருந்தால் சட்டம் பாயுமென எச்சரிக்கை   பன்றிகள் மத்தியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் ) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் "தொற்று" அல்லது "சந்தேகத்திற்குரிய" பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பன்றிகள் அல்லது பன்றி இறைச்சி பொருட்களை கொண்டு செல்வது, பன்றிகளை அறுப்பது, பன்றிகளை செயற்கையாக இனப்பெருக்கம் செய்தல், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல் மற்றும் தொற்றுள்ள பாதிக்கப்பட்ட விலங்குகளின் சடலங்களை நீர்நிலைகளில் அல்லது வழிகளில் அப்புறப்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்படும்.விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் கே.ஏ.சி.எச் அபேரத்ன கொத்தலாவலவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வந்த உத்தரவு, ASF மற்றும் போர்சின் இனப்பெருக்க மற்றும் சுவாச நோய்க்குறி (PRRS) பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்திக் காட்டுகிறது.இவ்விரு நோய்களும் தீவரமாகத் தொற்றக்கூடியவை மற்றும் பன்றி வளர்ப்புத் தொழிலில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.இந்த நிலையில், பன்றி இறைச்சியை வைத்திருப்பவர்கள் சட்ட நடவடிக்கைக்கு முகம் கொடுக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement