மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்படுவதாக எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு நேற்று (24) இரவு கிடைத்த அவசர குறுஞ்செய்தியின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் 24 வயதுடைய மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேகநபரும் குழந்தையும் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
குழந்தை கைகளை உயர்த்தி தரையில் மண்டியிட்டு சாப்பாடு கேட்ட போது குழந்தையை கடுமையான வார்த்தைகளால் திட்டி, குழந்தையின் கால் ஒன்றை துவிச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தின் கீழ் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
குழந்தையை கொடூரமாக தாக்கும் காணொளிகளை வெளிநாட்டில் உள்ள தாய்க்கு சந்தேகநபர் அனுப்பி வைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதை அவதானித்துள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கி காணொளியை வெளிநாட்டிலுள்ள தாய்க்கு அனுப்பிய தந்தை மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்படுவதாக எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு நேற்று (24) இரவு கிடைத்த அவசர குறுஞ்செய்தியின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் 24 வயதுடைய மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேகநபரும் குழந்தையும் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.குழந்தை கைகளை உயர்த்தி தரையில் மண்டியிட்டு சாப்பாடு கேட்ட போது குழந்தையை கடுமையான வார்த்தைகளால் திட்டி, குழந்தையின் கால் ஒன்றை துவிச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தின் கீழ் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுகுழந்தையை கொடூரமாக தாக்கும் காணொளிகளை வெளிநாட்டில் உள்ள தாய்க்கு சந்தேகநபர் அனுப்பி வைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதை அவதானித்துள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.