சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல் திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லோகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
குறித்த தொடருந்து மார்க்கத்தின் சமிக்ஞை அமைப்பு சீரமைக்கப்படவில்லை எனவும், அதனால் தொடருந்து மார்க்கம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அதனைத் திறக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக லோகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்க விருந்துபசாரம்; ரணிலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல் திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லோகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. குறித்த தொடருந்து மார்க்கத்தின் சமிக்ஞை அமைப்பு சீரமைக்கப்படவில்லை எனவும், அதனால் தொடருந்து மார்க்கம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அதனைத் திறக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக லோகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.