• May 09 2024

இலங்கையில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த பெண் வைத்தியர்: குவியும் பாராட்டுக்கள்!SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 11:16 pm
image

Advertisement

மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வயோதிப பெண்ணின் உயிரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரான மனோரி கமகே காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 85 வயதுடைய வயோதிப் பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது, ​​மருத்துவர் அல்லது மருத்துவ உதவி வழங்கக்கூடிய நபர் இருந்தால், தங்கள் குழுவினருக்குத் தெரிவிக்குமாறு விமானப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்போது இந்த விமானத்தில் பயணித்த வைத்தியர் மனோரி கமகே முன் வந்தார். மூச்சு விடுவதில் சிரமப்பட்ட வயோதிப பெண்ணுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளை வழங்கினார்.

அதன்படி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பலமுறை ஒக்சிஜன் வழங்கவும், Inhaler மூலம் மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விமானத்தில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி எதுவும் இல்லை, இதன்போது அங்கு ஒரு பயணியின் smart watch மூலம் வயதான பெண்ணின் ரத்தத்தில் உள்ள ஒக்ஸிஜன் அளவை கணிப்பிட்டார்.

மற்றொரு பயணியிடம் இருந்த ஆஸ்பிரின் மருந்தை நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.

நோயாளியிடம் இருந்த இன்ஹேலர் பலமுறை செலுத்தப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை.

மேலும் prednisolone syrup இனையும் கொடுத்து வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். வயோதிபப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த இலங்கை வைத்தியருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த பெண் வைத்தியர்: குவியும் பாராட்டுக்கள்SamugamMedia மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வயோதிப பெண்ணின் உயிரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரான மனோரி கமகே காப்பாற்றியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 85 வயதுடைய வயோதிப் பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது, ​​மருத்துவர் அல்லது மருத்துவ உதவி வழங்கக்கூடிய நபர் இருந்தால், தங்கள் குழுவினருக்குத் தெரிவிக்குமாறு விமானப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.அதன்போது இந்த விமானத்தில் பயணித்த வைத்தியர் மனோரி கமகே முன் வந்தார். மூச்சு விடுவதில் சிரமப்பட்ட வயோதிப பெண்ணுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளை வழங்கினார். அதன்படி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பலமுறை ஒக்சிஜன் வழங்கவும், Inhaler மூலம் மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். விமானத்தில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி எதுவும் இல்லை, இதன்போது அங்கு ஒரு பயணியின் smart watch மூலம் வயதான பெண்ணின் ரத்தத்தில் உள்ள ஒக்ஸிஜன் அளவை கணிப்பிட்டார். மற்றொரு பயணியிடம் இருந்த ஆஸ்பிரின் மருந்தை நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்தார். நோயாளியிடம் இருந்த இன்ஹேலர் பலமுறை செலுத்தப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை.மேலும் prednisolone syrup இனையும் கொடுத்து வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். வயோதிபப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த இலங்கை வைத்தியருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement