• May 17 2024

திரையுலகில் தொடரும் சோகம்.. பிரபல நடிகர் திடீர் மரணம்!SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 10:57 pm
image

Advertisement

பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர்தான் நடிகர் ஷியா முகைதின்.

இவர் 'லாரன்ஸ் ஆப் அரபிக்' என்ற ஹாலிவுட் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.



மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் என்ற பெருமையையும் முகைதின் பெற்று கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பின்னர் பல்வேறு படங்களில் நடித்த இவர் டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்ட கலைஞராக பணியாற்றியுள்ளார்.

இதன் பின் திரைப்படங்களில் மட்டுமல்லாது இங்கிலாந்து திரைத்துறையில் பல சீரியல் நிகழ்ச்சிகளில் நடித்தும் மிகவும் பிரபலமானார்.

அத்தோடு இவர் ஹாலிவுட்டில் மட்டுமல்லாது பாகிஸ்தான் திரைத்துறையிலும் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கின்றார். இதனிடையே, பாகிஸ்தானின் கராச்சியில் வசித்துவந்த 91வயதான முகைதினுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து அவர் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நடிகர் ஷியா முகைதின் இன்று காலை மரணமடைந்துள்ளார். அதாவது வயது முதிர்வு காரணமாகவே ஷியா முகைதினின் காலமானார்.

அவரது மரைவிற்கு பாகிஸ்தான் பிரதமர் உள்பட ரசிகர்கள் பலரரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகில் தொடரும் சோகம். பிரபல நடிகர் திடீர் மரணம்SamugamMedia பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர்தான் நடிகர் ஷியா முகைதின். இவர் 'லாரன்ஸ் ஆப் அரபிக்' என்ற ஹாலிவுட் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் என்ற பெருமையையும் முகைதின் பெற்று கொண்டார்.இதனைத் தொடர்ந்து பின்னர் பல்வேறு படங்களில் நடித்த இவர் டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்ட கலைஞராக பணியாற்றியுள்ளார். இதன் பின் திரைப்படங்களில் மட்டுமல்லாது இங்கிலாந்து திரைத்துறையில் பல சீரியல் நிகழ்ச்சிகளில் நடித்தும் மிகவும் பிரபலமானார். அத்தோடு இவர் ஹாலிவுட்டில் மட்டுமல்லாது பாகிஸ்தான் திரைத்துறையிலும் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கின்றார். இதனிடையே, பாகிஸ்தானின் கராச்சியில் வசித்துவந்த 91வயதான முகைதினுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.இதனையடுத்து அவர் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நடிகர் ஷியா முகைதின் இன்று காலை மரணமடைந்துள்ளார். அதாவது வயது முதிர்வு காரணமாகவே ஷியா முகைதினின் காலமானார். அவரது மரைவிற்கு பாகிஸ்தான் பிரதமர் உள்பட ரசிகர்கள் பலரரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement