• May 17 2024

நல்லூர் கந்தனின் கட்டியம் கூறும் விஷ்வ பிரசன்னா குருக்களை பாராட்டிய இந்திய நிதி அமைச்சர்...!samugammedia

Sharmi / Nov 3rd 2023, 2:00 pm
image

Advertisement

யாழ் நல்லூர் ஆலயத்திற்கு  இன்று விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தனின் மஹோற்சவத்தின் போது கட்டியம் கூறும் விஸ்வ பிரசன்னா குருக்களை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் அங்கு இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகரின் பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து  நல்லூர் கந்தனின் மஹோற்சவத்தின் போது கட்டியம்  கூறும் பிரசன்னா குருக்கள் உலகளவில் தற்போது ஹீரோ எனவும் அவர்  கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பராட்டினார்.

நல்லூர் கந்தனின் 25 நாள் மஹோற்சவத்தின் போது நடைபெறும் ஒருமுகத் திருவிழாவில்  விஸ்வ பிரசன்னா குருக்களின் கணீர் குரலில் கட்டியம் சொல்லப்படும். அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.




நல்லூர் கந்தனின் கட்டியம் கூறும் விஷ்வ பிரசன்னா குருக்களை பாராட்டிய இந்திய நிதி அமைச்சர்.samugammedia யாழ் நல்லூர் ஆலயத்திற்கு  இன்று விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தனின் மஹோற்சவத்தின் போது கட்டியம் கூறும் விஸ்வ பிரசன்னா குருக்களை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தார்.இந்நிலையில் அங்கு இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகரின் பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார்.அதனைத் தொடர்ந்து  நல்லூர் கந்தனின் மஹோற்சவத்தின் போது கட்டியம்  கூறும் பிரசன்னா குருக்கள் உலகளவில் தற்போது ஹீரோ எனவும் அவர்  கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பராட்டினார்.நல்லூர் கந்தனின் 25 நாள் மஹோற்சவத்தின் போது நடைபெறும் ஒருமுகத் திருவிழாவில்  விஸ்வ பிரசன்னா குருக்களின் கணீர் குரலில் கட்டியம் சொல்லப்படும். அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement