• Nov 19 2024

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிதி மோசடி..!

Sharmi / Nov 8th 2024, 11:27 am
image

புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆறு பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

அந்த சங்கத்தின் கீழ் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் 13 மாதங்களுக்குள் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அமைப்பினால் ஆவணங்கள் சரியான முறையில் பேணப்படாத நிலையில் இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிதி மோசடி. புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆறு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அந்த சங்கத்தின் கீழ் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் 13 மாதங்களுக்குள் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அமைப்பினால் ஆவணங்கள் சரியான முறையில் பேணப்படாத நிலையில் இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement