• Jan 13 2025

தளர்த்தப்பட்ட தடை - முதலாவது தொகுதி வாகனங்கள் இலங்கையில் இறக்குமதி!

Chithra / Dec 19th 2024, 8:07 am
image

 

வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் அதற்கான தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதலாவது தொகுதி வாகனங்கள் நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

டொயோட்டா லங்கா நிறுவனம் குறித்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. 

சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த வானங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 

அதன்படி, குறித்த நிறுவனம், 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதுடன், அதில் பேருந்துகள் மற்றும் வேன் என்பன அடங்குகின்றன. 

இதற்கிடையில், சாரதி உட்பட 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் கார்கள், முக்கிய பிரமுகர்கள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட விசேட வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விசேட நோக்க வாகனங்கள் என்ற பிரிவிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, வாகன இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு தமது சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். 

ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அதன்படி, ஜப்பானில் 5 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. 

அதன்படி, ஜப்பானில் 7 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்குமாயின், மேலும் குறைந்த விலையில் வானங்களை இறக்குமதி செய்ய முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், 10 வருடம் பயன்படுத்தப்பட்ட பாரவூர்திகளையும், 3 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கும் என நம்புகிறோம். 

அதன்படி, புதிதாக 30 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் விட்ஸ் கார்கள், 6 இலட்சம் ரூபாவுக்கு ஜப்பானிடமிருந்து, கொள்வனவு செய்யப்படும். 

பின்னர் இலங்கையில் அதனை சாதாரண விலைகளில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.


தளர்த்தப்பட்ட தடை - முதலாவது தொகுதி வாகனங்கள் இலங்கையில் இறக்குமதி  வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் அதற்கான தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதலாவது தொகுதி வாகனங்கள் நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா லங்கா நிறுவனம் குறித்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த வானங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த நிறுவனம், 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதுடன், அதில் பேருந்துகள் மற்றும் வேன் என்பன அடங்குகின்றன. இதற்கிடையில், சாரதி உட்பட 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் கார்கள், முக்கிய பிரமுகர்கள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட விசேட வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விசேட நோக்க வாகனங்கள் என்ற பிரிவிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வாகன இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு தமது சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, ஜப்பானில் 5 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. அதன்படி, ஜப்பானில் 7 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்குமாயின், மேலும் குறைந்த விலையில் வானங்களை இறக்குமதி செய்ய முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், 10 வருடம் பயன்படுத்தப்பட்ட பாரவூர்திகளையும், 3 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கும் என நம்புகிறோம். அதன்படி, புதிதாக 30 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் விட்ஸ் கார்கள், 6 இலட்சம் ரூபாவுக்கு ஜப்பானிடமிருந்து, கொள்வனவு செய்யப்படும். பின்னர் இலங்கையில் அதனை சாதாரண விலைகளில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement