• Sep 19 2024

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு ! samugammedia

Tamil nila / Oct 6th 2023, 10:10 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

குறித்த நிகழ்வு இன்றைய தினம் (06.) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. 



இதன்போது பயனாளிகளுக்கு தலா 45 ஆயிரம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அன்பு புரம் , இரணைமாதாநகர், நாச்சிக்குடா, நாவாந்துறை, வேலைப்பாடு, கிளாலி  உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 40 பயனாளிகளுக்கு குறித்த கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 



இந்நிகழ்வானது மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர்  யாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், மற்றும் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் குறித்த திட்டத்தில் வடக்கு,  மாகாணத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட 172 பயனாளிகளுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்றைய தினம் (06.) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பயனாளிகளுக்கு தலா 45 ஆயிரம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அன்பு புரம் , இரணைமாதாநகர், நாச்சிக்குடா, நாவாந்துறை, வேலைப்பாடு, கிளாலி  உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 40 பயனாளிகளுக்கு குறித்த கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர்  யாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம்பெற்றுள்ளது.இதில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், மற்றும் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.மேலும் குறித்த திட்டத்தில் வடக்கு,  மாகாணத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட 172 பயனாளிகளுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement