• Apr 16 2025

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்த மீனவர் சாவு

Chithra / Apr 15th 2025, 1:23 pm
image

 

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு கடலுக்கு மீன்படிக்கச் சென்ற மேற்படி மீனவர் இன்று அதிகாலை 3 மணியளவில் மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல்போயிருந்தார்.

இவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல்போனவரின் சடலம் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தரான 59 வயதுடைய ஷாகுல் ஹமீத் முஹம்மத் பஷீர் என்பவரே இவ்வாறு காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விவாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்த மீனவர் சாவு  மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்றிரவு கடலுக்கு மீன்படிக்கச் சென்ற மேற்படி மீனவர் இன்று அதிகாலை 3 மணியளவில் மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல்போயிருந்தார்.இவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல்போனவரின் சடலம் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தரான 59 வயதுடைய ஷாகுல் ஹமீத் முஹம்மத் பஷீர் என்பவரே இவ்வாறு காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விவாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement