• May 17 2024

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டம் மூலம் கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு! அன்னராசா தெரிவிப்பு samugammedia

Chithra / Jun 8th 2023, 9:03 am
image

Advertisement

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டம், ஊடகவியலாளர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படுவதாகவும், இதன்மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் வெளிவராமல் தடுக்கப்படும் எனவும் யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு  கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் பல ஊடகவியலாளர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டதுடன், தீர்வுகளும் வழங்கப்பட்டதாக அன்னராசா தெரிவித்தார்.

எனவே, புதிய சட்டம் ஊடாக இவ்வாறான பிரச்சினைகள் வெளிக்கொண்டுவராமல் தடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுவதாகவும் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். 


ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டம் மூலம் கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு அன்னராசா தெரிவிப்பு samugammedia ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டம், ஊடகவியலாளர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படுவதாகவும், இதன்மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் வெளிவராமல் தடுக்கப்படும் எனவும் யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு  கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் பல ஊடகவியலாளர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டதுடன், தீர்வுகளும் வழங்கப்பட்டதாக அன்னராசா தெரிவித்தார்.எனவே, புதிய சட்டம் ஊடாக இவ்வாறான பிரச்சினைகள் வெளிக்கொண்டுவராமல் தடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இதன்மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுவதாகவும் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement