• Sep 20 2024

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் - 10 ஆண்டுகள் கழிந்தும் அன்றாடத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில்! samugammedia

Chithra / Jun 29th 2023, 1:48 pm
image

Advertisement

30 ஆண்டு யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட மீனவர்கள் 10 ஆண்டுகள் கழிந்தும் அவர்களது அன்றாடத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலுள்ளனர்  என அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் செயளாளர் டினேஸ் சுரஞ்சன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள முழு மீனவர்களும் ஒன்றாகச் சேர்ந்து செயற்படும் வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளோம். 

எதிர்வரும் 6ம் திகதி வடமாகாணத்திலுள்ள அனைத்து மீனவர்களையும் இணைத்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளோம்.

பேர்ள் கப்பலுடைய பாதிப்பானது கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பில் நேரடியாக பாதித்திருந்தாலும் யாழ்ப்பாணம்  மற்றும் புத்தளத்திலும் அவற்றின் பாதிப்பு ஏற்பட்டது என்றார்.

மேலும், ஊடக சுதந்திரம் பொதுவானது. ஊடகம் தான் எமது பிர்ச்சினையை வெளித்தரப்பிற்கு கொண்டு செல்கின்றது. இவற்றை அடக்கும் சட்டமூலம் தொடர்பில் அரசு மீள் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.

கடலட்டை பண்ணையை செய்பவர்கள் பல்தேசியக் கம்பனிகளும் அரசியல்வாதிகளுமாகக் காணப்படுகின்றனர்.

இது பரம்பரை தொழிலை பாதிப்பதாக அமைந்தால் இது தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் - 10 ஆண்டுகள் கழிந்தும் அன்றாடத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் samugammedia 30 ஆண்டு யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட மீனவர்கள் 10 ஆண்டுகள் கழிந்தும் அவர்களது அன்றாடத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலுள்ளனர்  என அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் செயளாளர் டினேஸ் சுரஞ்சன் பெர்ணான்டோ தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள முழு மீனவர்களும் ஒன்றாகச் சேர்ந்து செயற்படும் வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளோம். எதிர்வரும் 6ம் திகதி வடமாகாணத்திலுள்ள அனைத்து மீனவர்களையும் இணைத்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளோம்.பேர்ள் கப்பலுடைய பாதிப்பானது கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பில் நேரடியாக பாதித்திருந்தாலும் யாழ்ப்பாணம்  மற்றும் புத்தளத்திலும் அவற்றின் பாதிப்பு ஏற்பட்டது என்றார்.மேலும், ஊடக சுதந்திரம் பொதுவானது. ஊடகம் தான் எமது பிர்ச்சினையை வெளித்தரப்பிற்கு கொண்டு செல்கின்றது. இவற்றை அடக்கும் சட்டமூலம் தொடர்பில் அரசு மீள் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.கடலட்டை பண்ணையை செய்பவர்கள் பல்தேசியக் கம்பனிகளும் அரசியல்வாதிகளுமாகக் காணப்படுகின்றனர்.இது பரம்பரை தொழிலை பாதிப்பதாக அமைந்தால் இது தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement