• Feb 24 2025

மீனவர்கள் கைது - இராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தப் போராட்டம்!

Tharmini / Feb 24th 2025, 2:13 pm
image

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (23) அதிகாலை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

அத்துடன், மீன்பிடி பணிகளுக்காக மீனவர்கள் பயன்படுத்தி 05 விசைப் படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர்.

கைது செய்த இந்திய மீனவர்களை 2025 ஆம் ஆண்டு இதுவரை 18 இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

மேலும், 131 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இதனிடையே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கமாறு வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.






 

மீனவர்கள் கைது - இராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.நேற்று (23) அதிகாலை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.அத்துடன், மீன்பிடி பணிகளுக்காக மீனவர்கள் பயன்படுத்தி 05 விசைப் படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர்.கைது செய்த இந்திய மீனவர்களை 2025 ஆம் ஆண்டு இதுவரை 18 இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.மேலும், 131 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை இதனிடையே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கமாறு வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement