• Nov 24 2024

யாழ் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்...!

Sharmi / Feb 20th 2024, 11:19 pm
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்றையதினம்(20) போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்த்தால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த்தால் தூதுவராயம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது தூதுவராலயத்திற்கு அருகாமையில் போராட்டகாரர்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 7 பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதன் போது போராட்டகார்ர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார், அத்து மீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து, வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டகாரர்களை இடைமறித்த பொலிஸாருடனும் வாக்குவிதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த்து.

இப் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்த மீனவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பெருமளவிலான பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்றையதினம்(20) போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்த்தால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த்தால் தூதுவராயம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.இந் நிலையில் காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது தூதுவராலயத்திற்கு அருகாமையில் போராட்டகாரர்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 7 பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.இதன் போது போராட்டகார்ர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார், அத்து மீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து, வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் போது போராட்டகாரர்களை இடைமறித்த பொலிஸாருடனும் வாக்குவிதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த்து.இப் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்த மீனவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பெருமளவிலான பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement