பருத்தித்துறை - முனை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட மீனவர்வகள் இன்று யாழ் மாவட்டச் செயலர், ஆளுநர் மற்றும் கட்றொழில் அமைச்சரையும் சந்தித்து மகஜர்களை கையளித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் இன்று(27) கலந்துரையாடியுள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் மீன்பிடி வாடிகளை அகற்றுமாறும், தவறும்பட்சத்தில் இரு வாரங்களின் பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோரம்பேண் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை பூராகவும் கடற்கரையோரங்களில் மீனவர்களின் மீன்பிடிவாடிகள் அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலமே மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் கரையோர வாடிகளை மாத்திரம் அகற்றுமாறு கரையோர பேண் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது ஏன்?
இதனால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும் என மீனவர்கள் அமைச்சரிடமும் மாவட்ட அரச அதிபரிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனை உடன் நிறுத்துமாறு அமைச்சர் இ.சந்திரசேகரன் குறித்த திணைக்கள அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பருத்தித்துறை மீனவர்கள் - அமைச்சர் மற்றும் அரச அதிபருடன் கலந்துரையாடல் பருத்தித்துறை - முனை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட மீனவர்வகள் இன்று யாழ் மாவட்டச் செயலர், ஆளுநர் மற்றும் கட்றொழில் அமைச்சரையும் சந்தித்து மகஜர்களை கையளித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் இன்று(27) கலந்துரையாடியுள்ளனர்.பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் மீன்பிடி வாடிகளை அகற்றுமாறும், தவறும்பட்சத்தில் இரு வாரங்களின் பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோரம்பேண் திணைக்களம் அறிவித்துள்ளது.இலங்கை பூராகவும் கடற்கரையோரங்களில் மீனவர்களின் மீன்பிடிவாடிகள் அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலமே மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இது இவ்வாறிருக்க பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் கரையோர வாடிகளை மாத்திரம் அகற்றுமாறு கரையோர பேண் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது ஏன்இதனால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும் என மீனவர்கள் அமைச்சரிடமும் மாவட்ட அரச அதிபரிடமும் முறையிட்டுள்ளனர்.இதனை உடன் நிறுத்துமாறு அமைச்சர் இ.சந்திரசேகரன் குறித்த திணைக்கள அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.