• Apr 28 2024

நான்கு அழகிகளுடன் போதைபொருள் விருந்தளித்த ஐவர் கைது!

Tamil nila / Dec 24th 2022, 12:00 pm
image

Advertisement

வாடகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நான்கு அழகிகளுடன் போதைபொருள் விருந்தளித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.


அந்த சந்தேக நபர்களில் படோவிட்ட பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் மகன்களும் உள்ளடங்குவதாக தேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 600 மில்லிகிராம் ஹெஷ் போதைப்பொருள் மற்றும் மூன்று இனந்தெரியாத போதை மாத்திரைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


பொரலஸ்கமுவ பெப்பிலியான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒன்றரை நாட்களாக போதைப்பொருள் வர்த்தகம் அல்லது போதை விருந்தொன்றை சிலர் இணைந்து நடத்துவதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட யுவதிகள் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும், கடத்தல்காரர்கள் இருவரும் குறித்த பெண்களை விருந்திற்காக பணம் செலுத்தி அழைத்து வந்துள்ளதாகவும் காவல்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.


சந்தேகத்திற்குரிய பெண்கள் நால்வரும் கொழும்பிற்கு வெளியில் தூரப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், ஆண்கள் கொழும்பை அண்மித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்டவர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


நான்கு அழகிகளுடன் போதைபொருள் விருந்தளித்த ஐவர் கைது வாடகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நான்கு அழகிகளுடன் போதைபொருள் விருந்தளித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.அந்த சந்தேக நபர்களில் படோவிட்ட பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் மகன்களும் உள்ளடங்குவதாக தேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 600 மில்லிகிராம் ஹெஷ் போதைப்பொருள் மற்றும் மூன்று இனந்தெரியாத போதை மாத்திரைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.பொரலஸ்கமுவ பெப்பிலியான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒன்றரை நாட்களாக போதைப்பொருள் வர்த்தகம் அல்லது போதை விருந்தொன்றை சிலர் இணைந்து நடத்துவதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட யுவதிகள் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும், கடத்தல்காரர்கள் இருவரும் குறித்த பெண்களை விருந்திற்காக பணம் செலுத்தி அழைத்து வந்துள்ளதாகவும் காவல்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.சந்தேகத்திற்குரிய பெண்கள் நால்வரும் கொழும்பிற்கு வெளியில் தூரப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், ஆண்கள் கொழும்பை அண்மித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டவர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement