• May 04 2024

இங்கிலாந்து படகு விபத்தில் ஐவர் பலி..!!

Tamil nila / Apr 23rd 2024, 7:19 pm
image

Advertisement

இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முனைப்பில் படகில் இங்கிலிஷ் கால்வாயைக் கடக்க முயன்றவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இதனை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன.

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களைத் தடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்து கவனம் பெற்றுள்ளது. 

படகு கவிழ்ந்து 5 பேர் இறந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பிரான்ஸ் நாட்டின் வடக்கே உள்ள மிகப் பிரபலமான போலோன் மீன்பிடி துறைமுகம் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக குடியேற்ற தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அதீத பிடிவாதம் காட்டிவந்த நிலையில், இது மனிதத் தன்மையற்ற கொடூரமான சட்டம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2024-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து முதல் 3 மாதங்களில் மட்டும் 5,000 பேர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர். 2023-ல் இவ்வாறாக நுழைந்தவர்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

இங்கிலாந்து படகு விபத்தில் ஐவர் பலி. இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முனைப்பில் படகில் இங்கிலிஷ் கால்வாயைக் கடக்க முயன்றவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இதனை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன.பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களைத் தடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்து கவனம் பெற்றுள்ளது. படகு கவிழ்ந்து 5 பேர் இறந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பிரான்ஸ் நாட்டின் வடக்கே உள்ள மிகப் பிரபலமான போலோன் மீன்பிடி துறைமுகம் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டவிரோதமாக குடியேற்ற தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அதீத பிடிவாதம் காட்டிவந்த நிலையில், இது மனிதத் தன்மையற்ற கொடூரமான சட்டம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.2024-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து முதல் 3 மாதங்களில் மட்டும் 5,000 பேர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர். 2023-ல் இவ்வாறாக நுழைந்தவர்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement