• May 04 2024

சிறுமி மான்வியின் இறப்பு - பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tamil nila / Apr 23rd 2024, 7:23 pm
image

Advertisement

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த  10 வயது சிறுமி உயிரிழந்ததமையானது குறித்த சிறுமி சாப்பிட்ட கேக் இல் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே காரணம் என  போலீசார் நடத்திய விசாரணையின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை குறித்த சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பொலிஸாரின் விசாரணையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. 

அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி மான்வியின் இறப்பு - பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த  10 வயது சிறுமி உயிரிழந்ததமையானது குறித்த சிறுமி சாப்பிட்ட கேக் இல் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே காரணம் என  போலீசார் நடத்திய விசாரணையின் முடிவில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை குறித்த சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.பொலிஸாரின் விசாரணையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement