• Nov 22 2024

இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு சட்டவிரோதமாக வருகை தந்த இலங்கையை சேர்ந்த ஐவர் கைது...!

Sharmi / Jun 4th 2024, 9:39 am
image

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் நேற்றையதினம்(3) காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 நபர்களும் கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு,தலைமன்னார்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து  இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த 5 பேரும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில் நேற்றையதினம்(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு சட்டவிரோதமாக வருகை தந்த இலங்கையை சேர்ந்த ஐவர் கைது. இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் நேற்றையதினம்(3) காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 5 நபர்களும் கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு,தலைமன்னார்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து  இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையிலே குறித்த 5 பேரும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில் நேற்றையதினம்(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement