• Sep 21 2024

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கும்! வெளியான அதிர்ச்சித் தகவல் SamugamMedia

Chithra / Feb 21st 2023, 1:24 pm
image

Advertisement

சீனாவின் கடன் மறுசீரமைப்பைப் புறந்தள்ளி இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கினால், பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என இன்டர்பிரிட்டர் இணைத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கிய கடனை இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே மறுசீரமைக்கச் சீனா இணங்கியுள்ள நிலையில், அந்த நாட்டின் உதவியில்லாமலேயே, இலங்கைக்கு அவசர நிதியுதவியை வழங்க, சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

எனினும், இந்த வசதியின்போது, சீனா, சர்வதேச நாணய நிதிய நிதியளிப்பு மற்றும் எந்த மறுசீரமைப்பு ஒப்பந்தத்திலிருந்தும் பயனடையக்கூடும்.

அதே நேரத்தில், மற்ற கடன்கொடுனர்களைக் காட்டிலும் கடன் நிவாரணத்தில் குறைவாகவே பங்களிக்கும் நிலை ஏற்படும் என்று தெ இன்டர்பிரிட்டர் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியம் வழங்கப்போகும் கடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஆழமான மனித செலவுகளை மாற்றியமைக்கச் சிறிதும் உதவாது.

பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவு விலைகள் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று இன்டர்பிரிட்டர் குறிப்பிட்டுள்ளது.

அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி, இலங்கைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிதி சுவாசத்தை மட்டுமே உருவாக்கும் என்றும் அந்த இணையம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கும் வெளியான அதிர்ச்சித் தகவல் SamugamMedia சீனாவின் கடன் மறுசீரமைப்பைப் புறந்தள்ளி இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கினால், பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என இன்டர்பிரிட்டர் இணைத்தளம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு வழங்கிய கடனை இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே மறுசீரமைக்கச் சீனா இணங்கியுள்ள நிலையில், அந்த நாட்டின் உதவியில்லாமலேயே, இலங்கைக்கு அவசர நிதியுதவியை வழங்க, சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.எனினும், இந்த வசதியின்போது, சீனா, சர்வதேச நாணய நிதிய நிதியளிப்பு மற்றும் எந்த மறுசீரமைப்பு ஒப்பந்தத்திலிருந்தும் பயனடையக்கூடும்.அதே நேரத்தில், மற்ற கடன்கொடுனர்களைக் காட்டிலும் கடன் நிவாரணத்தில் குறைவாகவே பங்களிக்கும் நிலை ஏற்படும் என்று தெ இன்டர்பிரிட்டர் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியம் வழங்கப்போகும் கடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஆழமான மனித செலவுகளை மாற்றியமைக்கச் சிறிதும் உதவாது.பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவு விலைகள் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று இன்டர்பிரிட்டர் குறிப்பிட்டுள்ளது.அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி, இலங்கைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிதி சுவாசத்தை மட்டுமே உருவாக்கும் என்றும் அந்த இணையம் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement