• May 17 2024

பட்ஜெட் யாருக்காக?அரசாங்கம் எங்களை பேய்க்காட்டுகிறது - யாழ் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு! samugammedia

Tamil nila / Nov 12th 2023, 7:42 pm
image

Advertisement

கூட்டத்தில் வீர வசனம் பேசும் அமைச்சர்கள் செயற்பாடுகளில் அதனைக்காட்டுவது இல்லை என விசனம் தெரிவித்த  வடமராட்சி வடக்கு கடற்றொழில் சங்க முன்னாள் உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம்,  இனிமேலாவது மீனவர்கள் பிரச்சினையை தீர்த்து  வைக்க முன்வாருங்கள் எனக்கோரிக்கை விடுத்துள்ளார்

இன்றையதினம் வடமராட்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாளை மறுதினம் வரவு லெவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,  அதில் மீனவர்களுக்கு எவ்வித நலன்களும் உள்ளடக்கப்படுவதில்லை. கடந்த 10 வருடங்களாக  நாங்கள் எவ்வளவு கத்தினாலும் அரசாங்கம் பாராமுகமாகவே இருக்கிறது 

நாங்களும் தொடர்ந்து கஷ்டபட்டுக் கொண்டு இருக்கிறோம்.  எந்த அரசாங்கமும்   எங்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. கடற்றொழில் பிரச்சினைகள் ஏதுவும் இதுவரை தீர்க்கப்படவில்லை. 

அரசாங்கம் எங்களை பேய்க்காட்டுகிறது. காலநிலை மாற்றத்தால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. கடற்றொழில் அமைச்சர் சொன்ன எதுவும் செய்யவில்லை. பருத்தித்துறை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் வருகிறார்கள் ஆனால் எங்களுக்கு அனுமதி இல்லை.  கடலணையை கட்டி தரும்படி கேட்டும் இதுவரை கட்டி தரவில்லை. கடற்றொழில் பாதிப்புகளுக்கு நிவாரணத்தை அரசாங்கம் தருவது இல்லை. 

வருடா வருடம் பட்ஜெட்டில் ஒதுக்குப்படும் பணம் யாருக்கு போகிறது என்று தெரியவில்லை. அமைச்சர் சுரேஷ் ராகவன் ஆளுநராக இருந்த போது 16 வான்கள் திருத்துவதற்கு காசு ஒதுக்கினார். தற்போது 4 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. இக்கால நிலைக்கு எங்கள் கடற்றொழில் பொருட்கள் உடையக்கூடிய நிலையுள்ளது. அதனை திருத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசாங்கம் தற்போது பட்ஜெட் ஒதுக்குகிறது... அது ஏன் ஒதுக்குகிறது ? யாருக்காக ஒதுக்குகிறது ? எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்குகிறது ஆனால் எதையும் செய்வது இல்லை. 

விலையேற்றம்  அதிகரித்த போதிலும் அரசாங்கம் மானியம்  வழங்கவில்லை. கடற்றொழில் பொருட்களுக்கு காப்புறுதி செய்தும் பயனில்லை. இனி வரும் பட்ஜெட்டில் எங்களுக்கு கடலணை கட்டித்தர வேண்டும்.  

மீனவர்கள் எப்போதும் கஷ்டத்தினை மட்டும் தான் அனுபவிக்கிறோம். எல்லா வழிகளாலும்  நாங்கள் நசுக்கப்படுகிறோம். யுத்தம் முடிந்த பின்னரும் எங்களுக்கு விடிவு இல்லை. 

கூட்டத்தில் வீர வசனம் பேசும் அமைச்சர்கள் செயற்பாடுகளில் அதனைக்காட்டுவது இல்லை. இனிமேலாவது எங்கள் பிரச்சினையை தீர்த்து  வையுங்கள். யாழ் மாவட்ட மீனவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை. 

மீனவர்களுக்கு மானியம் வழங்கப்படவேண்டும். வாழ்வாதார உதவிகள் செய்யப்பட வேண்டும். கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் மக்கள் மேல் கரிசனை உள்ளவராக இருந்தால் அரசாங்கத்திடம் உதவிகளை பெற்று எங்களுக்கு செய்ய வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

பட்ஜெட் யாருக்காகஅரசாங்கம் எங்களை பேய்க்காட்டுகிறது - யாழ் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு samugammedia கூட்டத்தில் வீர வசனம் பேசும் அமைச்சர்கள் செயற்பாடுகளில் அதனைக்காட்டுவது இல்லை என விசனம் தெரிவித்த  வடமராட்சி வடக்கு கடற்றொழில் சங்க முன்னாள் உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம்,  இனிமேலாவது மீனவர்கள் பிரச்சினையை தீர்த்து  வைக்க முன்வாருங்கள் எனக்கோரிக்கை விடுத்துள்ளார்இன்றையதினம் வடமராட்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாளை மறுதினம் வரவு லெவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,  அதில் மீனவர்களுக்கு எவ்வித நலன்களும் உள்ளடக்கப்படுவதில்லை. கடந்த 10 வருடங்களாக  நாங்கள் எவ்வளவு கத்தினாலும் அரசாங்கம் பாராமுகமாகவே இருக்கிறது நாங்களும் தொடர்ந்து கஷ்டபட்டுக் கொண்டு இருக்கிறோம்.  எந்த அரசாங்கமும்   எங்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. கடற்றொழில் பிரச்சினைகள் ஏதுவும் இதுவரை தீர்க்கப்படவில்லை. அரசாங்கம் எங்களை பேய்க்காட்டுகிறது. காலநிலை மாற்றத்தால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. கடற்றொழில் அமைச்சர் சொன்ன எதுவும் செய்யவில்லை. பருத்தித்துறை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் வருகிறார்கள் ஆனால் எங்களுக்கு அனுமதி இல்லை.  கடலணையை கட்டி தரும்படி கேட்டும் இதுவரை கட்டி தரவில்லை. கடற்றொழில் பாதிப்புகளுக்கு நிவாரணத்தை அரசாங்கம் தருவது இல்லை. வருடா வருடம் பட்ஜெட்டில் ஒதுக்குப்படும் பணம் யாருக்கு போகிறது என்று தெரியவில்லை. அமைச்சர் சுரேஷ் ராகவன் ஆளுநராக இருந்த போது 16 வான்கள் திருத்துவதற்கு காசு ஒதுக்கினார். தற்போது 4 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. இக்கால நிலைக்கு எங்கள் கடற்றொழில் பொருட்கள் உடையக்கூடிய நிலையுள்ளது. அதனை திருத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அரசாங்கம் தற்போது பட்ஜெட் ஒதுக்குகிறது. அது ஏன் ஒதுக்குகிறது யாருக்காக ஒதுக்குகிறது எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்குகிறது ஆனால் எதையும் செய்வது இல்லை. விலையேற்றம்  அதிகரித்த போதிலும் அரசாங்கம் மானியம்  வழங்கவில்லை. கடற்றொழில் பொருட்களுக்கு காப்புறுதி செய்தும் பயனில்லை. இனி வரும் பட்ஜெட்டில் எங்களுக்கு கடலணை கட்டித்தர வேண்டும்.  மீனவர்கள் எப்போதும் கஷ்டத்தினை மட்டும் தான் அனுபவிக்கிறோம். எல்லா வழிகளாலும்  நாங்கள் நசுக்கப்படுகிறோம். யுத்தம் முடிந்த பின்னரும் எங்களுக்கு விடிவு இல்லை. கூட்டத்தில் வீர வசனம் பேசும் அமைச்சர்கள் செயற்பாடுகளில் அதனைக்காட்டுவது இல்லை. இனிமேலாவது எங்கள் பிரச்சினையை தீர்த்து  வையுங்கள். யாழ் மாவட்ட மீனவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை. மீனவர்களுக்கு மானியம் வழங்கப்படவேண்டும். வாழ்வாதார உதவிகள் செய்யப்பட வேண்டும். கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் மக்கள் மேல் கரிசனை உள்ளவராக இருந்தால் அரசாங்கத்திடம் உதவிகளை பெற்று எங்களுக்கு செய்ய வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement