• Sep 20 2024

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கவில்லை என்றால் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க முடியாது – IMF சுட்டிக்காட்டு! samugammedia

Tamil nila / May 14th 2023, 6:10 pm
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, தொழில் நிபுணர்கள் சங்கத்தினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

வரிக் கொள்கை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன.

அதிகரிக்கப்பட்டுள்ள வரி விகிதம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் பேராசிரியர் அருண சாந்த ஆராச்சி தெரிவித்தார்.

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க முடியாது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கவில்லை என்றால் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க முடியாது – IMF சுட்டிக்காட்டு samugammedia சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, தொழில் நிபுணர்கள் சங்கத்தினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.வரிக் கொள்கை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன.அதிகரிக்கப்பட்டுள்ள வரி விகிதம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் பேராசிரியர் அருண சாந்த ஆராச்சி தெரிவித்தார்.உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க முடியாது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement